கேரமல் எக் புட்டிங்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
Nagercoil
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

8-10 பரிமாறுவது
  1. காய்த்த பால் -400மிலி
  2. முட்டை -4
  3. சீனி -8 டே.ஸ்பூன்
  4. வெண்ணிலா எசென்ஸ் -1 1/2 டீ ஸ்பூன்
  5. கேரமலைஸ் செய்ய
  6. சீனி-6 டே.ஸ்பூன்
  7. தண்ணீர் -4 டே.ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கேரமலைஸ் செய்ய ஒரு அடி கனமான பாத்திரத்தில் சீனி போட்டு கூடவே தண்ணீர் கலந்து மீதமான தீயில் கிளறவும்.

  2. 2

    ஒரு பதத்தில் தேன் கலரில் மாறும்போது அடுப்பை அணைத்து விட்டு புட்டிங் செய்யும் பாத்திரத்தில் ஊற்றி நன்கு பரத்தி ஆற விடவும்.

  3. 3

    இன்னொரு பாத்திரத்தில் சீனியை போட்டு அத்துடன் காய்ச்சிய பாலைச் சேர்த்து சீனி கரையும் வரை நன்றாக கலக்கவும்.

  4. 4

    அத்துடன் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.

  5. 5

    பின்பு ஓவ்வொரு முட்டையாக அடித்து விட்டு பாலுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த கலவை ஒரு பில்டரில் விட்டு பில்டர் பண்ணவும்.

  6. 6

    பின் பால் முட்டை கலவையை கேரமலைஸ் ஊத்தி வைத்திருக்கும் பாத்திரத்தில் விட்டு.பாத்திரத்தை மூடி போட்டு குக்கர் அல்லது ஏதாவது பாத்திரத்தில் தண்ணீர் விட்டு ஆவியில் மீதமான தீயில் 25 நிமிடம் வேகவைத்து எடுக்கவும் (குக்கரில் வைத்தால் வெயிட் போட வேண்டாம்).

  7. 7

    வேகவைத்து எடுத்த பின் நன்கு ஆறவிடவும்.

  8. 8

    ஆறிய பின் 1 மணி நேரம் பிரிட்ஜில் இருந்து வைக்கவும். பிரிட்ஜில் இருந்து எடுத்த பின் ஒரு பிலேட்டை அந்த புட்டிங் பாத்திரத்தின் மேல் வைத்து தலை கீழாக கவிழ்த்தி டி மோல்டு செய்யவும்.

  9. 9

    துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

  10. 10

    நாவில் வைத்தால் கரைந்து போகும் சுவையான கேரமல் எக் புட்டிங் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes