கத்தரிக்காய் கொத்சு (Brinjal kothsu)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

கத்திரிக்காய், தக்காளி சேர்த்து செய்யும் இந்த கொத்சு, அரிசி பருப்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் ஒரு துணை உணவு. மிகவும் சுவையானது. அனைவரும் செய்து சுவைக்க இங்கு பதிவு செய்துள்ளேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பேர்
  1. 5 கத்தரிக்காய்கள்
  2. 2 தக்காளி
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 5 சாம்பார் வெங்காயம்
  5. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1/2 டீஸ்பூன் தனியா தூள்
  8. 1/4டீஸ்பூன் காரம் மசாலா தூள்
  9. 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் துண்டுகள்
  10. உப்பு தேவையான அளவு
  11. தாளிக்க :
  12. 1 டேபிள் ஸ்பூன் எண்ணை
  13. 1/4 டீஸ்பூன் கடுகு
  14. கறிவேப்பிலை
  15. 1டீஸ்பூன் நெய்
  16. 1டீஸ்பூன் தேங்காய் துண்டுகள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கத்தரிக்காயை கழுவி, காம்பு நீக்கி,நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும் (தண்ணீரில் போட்டு வைக்கவில்லையெனில் கருப்பாக மாறிவிடும்)

  2. 2

    பெரிய வெங்காயம், சாம்பார் வெங்காயம், தக்காளியை நீளமாகவும், மல்லி இலை, தேங்காய் மிகவும் பொடியாகவும் நறுக்கி வைக்கவும்.

  3. 3

    கடாயை சூடு செய்து எண்ணை சேர்த்து, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், சாம்பார் வெங்காயம், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கி, கத்தரிக்காய் சேர்த்து கலந்துவிடவும்.

  4. 4

    பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், காரம் மசாலா தூள், உப்பு, நறுக்கிய மல்லி இலை சேர்த்து நன்கு கலந்து, இரண்டு நிமிடங்கள் விட்டு, தேங்காய் துண்டுகள் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.

  5. 5

    ஐந்து நிமிடங்கள் வெந்தவுடன், எடுத்தால், காய், வெங்காயம், தக்காளி எல்லாம் ஒன்று சேர்ந்து, நன்கு மசிந்து கொத்சு போல் மாறிவிடும்.இப்போது இறக்கி பரிமாறும் பௌலுக்கு மாற்றி, ஒரு டீஸ்பூன் நெய்,பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் தூவி அலங்கரித்தால் சுவையான கத்தரிக்காய் கொத்சு சுவைக்கத்தயார்.

  6. 6

    *இந்த கொத்சு அரிசி பருப்பு சாதம், கலந்த சாதம் மற்றும், பிளைன் சாதத்துடன் கலந்தும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். சப்பாத்தி, ரொட்டியு டனும் சேர்த்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (4)

Renukabala
Renukabala @renubala123
No Lakshmi. It will be ready within 15 minutes. This is from my personal experience and I was noting the time... Try and see. Brinjal(our local variety and you can see the picture in my posting) will cook so fast unlike other vegetables.
(எடிட்டட்)

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes