வெஜ் பீட்சா

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. கோதுமை மாவு - 1/2 கப்
  2. பேக்கிங் பவுடர் -1/2ஸ்பூன்
  3. பேக்கிங் சோடா -1/4ஸ்பூன்
  4. தயிர் -2ஸ்பூன்
  5. உப்பு - தேவையான அளவு
  6. எண்ணெய் -1ஸ்பூன்
  7. பீட்சா சாஸ் -4ஸ்பூன்
  8. ஒயிட் சாஸ் -2ஸ்பூன்
  9. பெரிய வெங்காயம் - 1
  10. தக்காளி - 1/2
  11. கேரட் - 1/2
  12. பீன்ஸ் - 1
  13. கேப்ஸிகம் - 1/2
  14. சில்லி ஃப்ளேக்ஸ் -1/2ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா, உப்பு, தயிர்,எண்ணெய், சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளவும்..

  2. 2

    அரை மணி நேரம் கழித்து, மாவை,சப்பாத்தி கல்லில் தேய்த்து,போர்கால் குத்தி வைத்துக் கொள்ளவும்..

  3. 3

    குக்கரில் ஸ்டாண்ட் வைத்து, அதன் மேல் ஒரு தட்டு வைத்து, பிரீ ஹிட் செய்துகொள்ளவும்,. பின்னர் தட்டின் மேல், எண்ணெய் தடவி, மிதமான தீயில் மாவை வைத்து, பத்து நிமிடங்கள் பேக் செய்துகொள்ளவும்

  4. 4

    பிறகு வெங்காயம், தக்காளி, கேரட்,பீன்ஸ், கேப்ஸிகம்,இவைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பின்னர் பேக் செய்த மாவின் மேல் பீட்சா சாஸ் தடவிக் கொள்ளவும், பின்னர் ஒயிட் சாஸ், நறுக்கிய காய்கறிகள், வைத்து,சில்லி பிளேஸ்ஸ் தூவிக் கொள்ளவும்..

  5. 5

    பின்னர் கடாய் வைத்து சூடானவுடன்,பீட்சாவை மூடி போட்டு,குறைவான தீயில் பத்து நிமிடம் பேக் செய்யவும்..

  6. 6

    வெஜிடபிள் பீட்சா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shobana Ramnath
அன்று

Similar Recipes