தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 250 கிராம் மட்டன்
  2. 250 கிராம் பாஸ்மதி அரிசி
  3. 6 வரமிளகாய்
  4. 1/2 கப் தயிர்
  5. 20 கிராம் இஞ்சி
  6. 20 கிராம் பூண்டு
  7. 5 சின்ன வெங்காயம்
  8. 2 பச்சை மிளகாய்
  9. வறுத்து அரைக்க:
  10. 1 டீஸ்பூன் சீரகம்
  11. 1 டீஸ்பூன் சோம்பு
  12. 1 டீஸ்பூன் மிளகு
  13. 1 டீஸ்பூன் மல்லி
  14. 2 ஏலக்காய்
  15. 2 கிராம்பு
  16. சிறுதுண்டு பட்டை
  17. 1 அன்னாசி பூ
  18. 1 நட்சத்திர சோம்பு
  19. 2பிரியாணி இலை
  20. 2 பெரிய வெங்காயம்
  21. 1 தக்காளி
  22. 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
  23. 2 தேக்கரண்டி நெய்
  24. கைப்பிடியளவு புதினா
  25. கைப்பிடியளவு கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கழுவி மட்டனை சுத்தம் செய்யவும்.

  2. 2

    ஆறு சிவப்பு மிளகாயை சுடுதண்ணீரில் ஊறவைத்து தயிர் சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    அரைத்த மிளகாய் விழுதை சுத்தம் செய்த மட்டனை சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  4. 4

    சம அளவு இஞ்சி, பூண்டு, 5 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

  5. 5

    வாணலியில் மிளகு, சீரகம், சோம்பு,மல்லி, கிராம்பு,ஏலக்காய்,பட்டை லவங்கம், அன்னாசிப் பூ ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுக்கவும் ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

  6. 6

    பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  7. 7

    குக்கரில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடு படுத்தவும். அதில் இரண்டு பிரியாணி இலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

  8. 8

    வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அரைத்த இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.

  9. 9

    இஞ்சி பூண்டு கலவையும் பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி புதினா கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.

  10. 10

    வறுத்து அரைத்த பிரியாணி மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும்.

  11. 11

    ஊற வைத்த மட்டன் கலவையை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  12. 12

    ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விசில் போட்டு 8 விசில் வரும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும்.

  13. 13

    குக்கரை திறந்து ஊறவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் இரண்டு தேக்கரண்டி நெய், புதினா கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

  14. 14

    சுவையான விருதை ஸ்பெஷல் மட்டன் பிரியாணி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

மீனா அபி
மீனா அபி @cook_21972813
அன்று

Similar Recipes