சின்னம்மன் ரோல்

#NoOvenBaking
இந்த ரெசிபியை கற்று தந்த MasterChef neha அவர்களுக்கு நன்றி.
சின்னம்மன் ரோல்
#NoOvenBaking
இந்த ரெசிபியை கற்று தந்த MasterChef neha அவர்களுக்கு நன்றி.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், சர்க்கரை, உப்பு,2 மேசைக்கரண்டி வெண்ணெய் இவற்றை சேர்த்து கலந்து விடவும்.ஒரு பவுலிங் பால் மற்றும் வினிகர் கலந்து 10 நிமிடம் அப்படியே வைக்கவும்.
- 2
பிறகு இந்த வினிகர் கலந்த பாலை மைதா மாவு கலவையுடன் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து மேல் சிறிதளவு எண்ணெய் தடவி 10 நிமிடம் அப்படியே மூடி வைத்து கொள்ளவும்.
- 3
சின்னம்மன் கலவை செய்ய: ஒரு பவுலில் 2 மேசைக்கரண்டி வெண்ணெய், ப்ரௌன் சர்க்கரை, பட்டை தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 4
பிறகு இந்த மாவை இரண்டு பங்காக பிரித்து வைக்கவும்.ஒரு பங்கை எடுத்து சப்பாத்தி கட்டையில் உருண்டயாக உருட்டி செவ்வக வடிவில் தேய்த்து அதன் மேல் இந்த சின்னம்மன் கலவை தேய்த்து கொள்ளவும்.
- 5
பிறகு அதை உருட்டி கொள்ளவும்.கத்தியால் சம பங்கு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து உப்பு சேர்த்து ஸ்டான்ட் போட்டு மூடி வைத்து 10 ப்ரீஹுட் செய்யவும்.
- 6
ஒரு தட்டில் வெண்ணெய் தடவி அதன் மேல் இந்த துண்டுகளை வைத்து கடாயில் ஸ்டான்ட் மேல் வைத்து மூடி போட்டு 25 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
- 7
பிறகு மற்றொரு பங்கு மாவை உருண்டையாக உருட்டி செவ்வக வடிவில் தேய்த்து அதன் மேல் சின்னம்மன் கலவையை சேர்த்து தேய்த்து விட்டு அதை பாதியாக மடித்து விடவும்.
- 8
இன்னொரு பக்கத்தில் இருந்து மடித்து விட்டு லேசாக தேய்த்து இதனை சமமாக நறுக்கி கொள்ளவும். பிறகு ஒரு துண்டினை மேல் பகுதி சிறிதளவு இடம் விட்டு அதை இரண்டாக நறுக்கி கொள்ளவும்.
- 9
பிறகு அதை மூன்று பகுதிகளாக பிரித்து சடை பின்னல் போல பின்னி அதை மடித்து கொள்ளவும். சில்வர் கிண்ணத்தில் வெண்ணெய் தடவி அதனுள் இந்த ரோல் வைத்து கடாயில் ஸ்டான்ட் மேல் வைத்து மூடி வைத்து 25 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். சூப்பரான சின்னம்மன் ரோல் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake #NoOvenBaking செஃப் நேகா அவர்களுக்கு நன்றி. Revathi Bobbi -
-
பீட்ஸா
#NoOvenBaking இந்த பீட்ஸா வை ஓவன் பயன்படுத்தாமல் மிகவும் ஆரோக்கியமான முறையில் எங்களுக்கு கற்றுக் கொடுத்த masterchef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake chef நேஹா அவர்களுக்கு மிக்க நன்றி.மிகவும் எளிமையான முறையில் சின்னமன் ரோல் செய்முறை கொடுத்ததற்கு. நன்றி madam. Siva Sankari -
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
சின்னமோன் ரோல்ஸ் / cinnamon roll
#noovenbaking முதன்முதலாக சின்னமோன் ரோல்ஸ் தயாரித்துள்ளேன் முதலில் பயந்து கொண்டே செய்தேன் பிறகு ருசியில் மயங்கி போனேன் நன்றி #chefneha Viji Prem -
-
-
-
-
-
-
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
முட்டையில்லா வெண்ணெய் மஃபின் (Eggless butter muffin recipe in tamil)
#GA4 #egglesscake #week22 Viji Prem -
-
-
-
பிஸ்கட் பவுல் கேக்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்கள் எனக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்து கொண்டு இருக்கிறது.என் குழந்தை பிஸ்கட் பாக்கெட்டுகளை திறந்து வைத்து விட்டதால் அவ்வளவு பிஸ்கட்களும் நமத்து போய்விட்டன. இதனால் நான் இவற்றை வீணாக்காமல் இந்த பிஸ்கட்களை கொண்டு பவுல் கேக் தயார் செய்து இருக்கிறேன் நன்றி. Kavitha Chandran -
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
-
-
More Recipes
கமெண்ட் (6)