கருவாட்டு பிரியாணி

Manju Murali
Manju Murali @cook_24781121

#cookwithfriends
மனதை அள்ளும், சுலபமான, மணமுள்ள நெத்திலி கருவாட்டு பிரியாணி. இந்த லாக்டவுனில் மீன் இறைச்சி கிடைக்காவிடில் இந்த பிரியாணி செய்து அசத்துங்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
2 மக்கள்
  1. 1கப் பாசுமதி அரிசி
  2. 15நெத்திலி கருவாடு
  3. 50 கிராம் எண்ணெய்
  4. 2 தேக்கரண்டி நெய்
  5. 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  6. 1பிரிஞ்சி இலை, 2 துண்டு பட்டை, 2 ஏலக்காய், 3 கிராம்பு
  7. 4 கீரிய பச்சை மிளகாய்
  8. 2 வெங்காயம்
  9. 2 சிறிய தக்காளி
  10. 2மேசைகரண்டி தயிர்
  11. 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  12. சிறிதுநறுக்கிய புதினா மல்லி தழை
  13. 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  14. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  15. 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  16. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    அரிசியை நன்கு கழுவி 15 நிமிடம் தண்ணீரில் ஊற விடவும். கருவாட்டை சுடு நீரில் சுத்தம் செய்து சிறிது மஞ்சள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

  2. 2

    ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி, கலந்த கருவாட்டை 2 நிமிடம் வதக்கி தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.

  3. 3

    அதே எண்ணெயில் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வறுக்கவும். பின் அதில் பச்சை மிளகாய் போட்டு அரைத்த நிமிடம் வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின்பு தக்காளி, சிறிது உப்பு சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். நறுக்கிய புதினா மல்லி தழை சேர்த்து 1நிமிடம் வதக்கவும்.

  4. 4

    இப்போது கடைந்த தயிர் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

  5. 5

    இப்போது எண்ணெயில் வதக்கி வைத்த கருவாட்டை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு 1.5 கப் தண்ணீர் சேர்க்கவும். பிரியாணிக்கு தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். தண்ணீர் கொதி வந்ததும் ஊறிய அரிசியை தண்ணீரை முற்றிலும் வடித்து சேர்க்கவும். கடைசியாக சிறிது நெய், எலுமிச்சை சாறு சேர்த்து குக்கரை மூடி 2விசில் வைத்து அடுப்பை அணைக்கவும். விசில் அடங்கிய பின் குக்கரை திறந்து மெதுவாக கரண்டியால் கிளறி விடவும்.

  6. 6

    சுவையான கருவாட்டு பிரியாணியை வெங்காய தயிர் பச்சடியோடு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manju Murali
Manju Murali @cook_24781121
அன்று

Similar Recipes