கச கச, முந்திரி சேர்த்த ஸ்பெஷல் வெள்ளை பிரியாணி (cashew chicken biryani recipe in tamil)

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

கச கச, முந்திரி சேர்த்த ஸ்பெஷல் வெள்ளை பிரியாணி (cashew chicken biryani recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 400 கிராம்பாசுமதி அரிசி
  2. 500 கிராம்சிக்கன்
  3. 2வெங்காயம்
  4. 2 துண்டுபட்டை
  5. 3ஏலக்காய்
  6. 4லவங்கம்
  7. 2பிரிஞ்சி இலை
  8. 1/2 டீஸ்பூன்மிளகு
  9. 1/4 டீஸ்பூன்னட்மேக் தூள்
  10. 1/2 கப்தயிர்
  11. 1/4 கப்கச கச,முந்திரி பேஸ்ட்
  12. 1 டேபிள் ஸ்பூன்ப்ரெஷ் கிரீம்
  13. 1 டீஸ்பூன்மிளகு தூள்-
  14. 1/2 டீஸ்பூன்வெள்ளை மிளகு தூள்
  15. 1/2 டீஸ்பூன்ஏலக்காய் தூள்
  16. 5பச்சை மிளகாய்
  17. 1 டேபிள் ஸ்பூன்எலுமிச்சை சாறு
  18. 1/4 கப்புதினா இலை
  19. 2 டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  20. 1/4 கப்மல்லி தழை
  21. 4 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  22. தேவைக்கேற்பஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை 1/2 மணி ஊற வைக்கவும்.

  2. 2

    சிக்கனை தயிர், ப்ரெஷ் கிரீம்,கச கச முந்திரி பேஸ்ட், மிளகு தூள், வெள்ளை மிளகு தூள்,உப்பு,எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, ஏலக்காய் தூள்,னட்மேக் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கிளறி,1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி,பட்டை,லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை,நட்சத்திர சோம்பு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் வதங்கியதும்,புதினா,மல்லி தழை மற்றும் ஊற வைத்த சிக்கனை அதில் சேர்த்து கிளறி,மூடி போட்டு 10 நிமிடம் மிதமான சூட்டில் வேக விடவும்.

  5. 5

    பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி(1 கப் அரிசிக்கு,1 1/2 கப் தண்ணீர்),அரிசி மற்றும் உப்பு போட்டு 10 நிமிடம் வேக விடவும்

  6. 6

    முக்கால் பாகம் வெந்ததும், ஒரு 20 நிமிடம் தம் போட்டு இறக்கவும்.

  7. 7

    சுவையான ஸ்பெஷல் வெள்ளை பிரியாணி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes