சீரகம் புளிக்குழம்பு

Sahana D
Sahana D @cook_20361448

#mom
குழந்தை பிறந்த பிறகு வயிற்றில் உள்ள புண் ஆற பத்திய காரமில்லாத உணவுகள் சாப்பிடணும். இந்த சீரக குழம்பு நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வர புண் குணமாகும் என என் அம்மா எனக்கு சொல்லுவார்கள். நான் இதை தான் சாப்பிட்டேன்.

சீரகம் புளிக்குழம்பு

#mom
குழந்தை பிறந்த பிறகு வயிற்றில் உள்ள புண் ஆற பத்திய காரமில்லாத உணவுகள் சாப்பிடணும். இந்த சீரக குழம்பு நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வர புண் குணமாகும் என என் அம்மா எனக்கு சொல்லுவார்கள். நான் இதை தான் சாப்பிட்டேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3 ஸ்பூன் சீரகம்
  2. எலுமிச்சை அளவுபுளி
  3. 1 வெங்காயம்
  4. 2 வர மிளகாய்
  5. கறிவேப்பிலை
  6. சிறிதளவுவெல்லம்
  7. தேவையானஅளவு உப்பு
  8. 1 ஸ்பூன் கடுகு
  9. 2 ஸ்பூன் கடலை பருப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    புளியை கரைத்து கொள்ளவும். வெறும் வாணலியில் சீரகம் சேர்த்து வறுத்து நைசாக அரைத்து கொள்ளவும்.

  2. 2

    கரைத்த புளியில் அரைத்த சீரக பொடியை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை தாளித்து பின் வெங்காயம் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    பின் சீரக பொடி சேர்த்து கலந்து வைத்த புளியை ஊற்றி உப்பு வெல்லம் சேர்த்து கலக்கி மூடி வைத்து கொதிக்க விடவும்.

  5. 5

    நன்கு கொதித்து கெட்டியாக வரும் வரை கொதிக்க விடவும். ஆரிய பிறகு எடுத்து வைத்து 10 நாள் வரை பயன்படுத்தி கொள்ளலாம்

  6. 6

    குழந்தை பிறந்தவர்களுக்கு மதியம் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து இந்த சீரக புளி குழம்பு பிசைந்து குடுத்தால் நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes