வெந்தயக்களி

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#india2020 #mom கிராமங்களில் பிரசவித்த பெண்களுக்கு முதலில் கொடுக்கும் உணவுகளில் ஒன்று இந்த வெந்தயக்களி இது வயிற்றில் உள்ள புண்ணை ஆற்றும் உடலில் உள்ள சூட்டை குறைக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
2-4 பரிமாறுவது
  1. 1/4கப் இட்லி அரிசி
  2. 1டேபிள் ஸ்பூன் பச்சரிசி
  3. 1டேபிள்ஸ்பூன் உளுந்தம்பருப்பு
  4. 2டேபிள் ஸ்பூன் வெந்தயம் (கசப்பு கொஞ்சம் குறைச்சலாக வேண்டும் என்று நினைத்தால் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ளவும்)
  5. 1/4கப் நல்லெண்ணெய்
  6. 3/4கப் நாட்டுச்சக்கரை
  7. சிறிதுஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி உளுந்து பச்சரிசி

  2. 2

    வெந்தயம் சேர்த்து 2-4 ஊற வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்... பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    நாட்டுச் சர்க்கரையில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும் பிறகு அதை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும்

  4. 4

    அரைத்து வைத்த மாவில் 1/4 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் சூடேற்றி அதில் அரைத்து வைத்த மாவில் சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும் மாவு கெட்டியானதும்.. நாட்டுச் சர்க்கரை கரைசலை சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்

  5. 5

    மாவு வெந்து கடாயில் ஒட்டாமல் வரும் பொழுது நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து ஒரு முறை நன்றாக கிளறவும் கையை தண்ணீரில் நனைத்து தொட்டுப் பார்க்கும் பொழுது ஒட்டாமல் வரவேண்டும் இதுவே சரியான பதம்

  6. 6

    வெந்தயக்களி இதில் அத்தனை சத்துக்களும் இருக்கிறது உடலை வலுவூட்டும் உடல் குளுமை அடையும், செரிமானம் சீராகும், வயிற்றுப்புண், வாய்ப்புண் இருந்தால் குணம் கிடைக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes