எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி 15 நிமிடம்
6 பரிமாறுவது
  1. 2 கப் மைதா மாவு
  2. 3/4 கப் கொக்கோ பவுடர்
  3. 3 அல்லது 3/4கப்முட்டை (அ) கெட்டித் தயிர்
  4. 1 கப் பொடித்த சக்கரை
  5. 2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  7. சிறிதுஉப்பு
  8. 1 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  9. 1/4கப் சுடுதண்ணீர் + 1 டீஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி தூள்
  10. 3/4 கப் பால்
  11. 1/2 கப் எண்ணெய்
  12. சாஸ் செய்ய
  13. 1/4 கப் கொக்கோ பவுடர்
  14. 2 டீஸ்பூன் மைதாமாவு அல்லது சோள மாவு
  15. 1/2 கப் சக்கரை
  16. 1/2 கப் பால்
  17. 2 டேபிள்ஸ்பூன் வெண்ணை

சமையல் குறிப்புகள்

1 மணி 15 நிமிடம்
  1. 1

    கேக் தட்டில் சிறிது எண்ணெய் தடவி பட்டர் பேப்பர் போட்டு 15 நிமிடம் வைக்கவும் ஒரு அகலமான கனமான பாத்திரத்தில் உப்பு அல்லது மணல் கொட்டி ஸ்டாண்ட் வைத்து 15 நிமிடம் பிரீ ஹிட் பண்ணவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் ஜல்லடை வைத்து அதில் மைதா மாவு,கொக்கோ பவுடர்,பேக்கிங் பவுடர்

  3. 3

    சோடா மாவு,சிறிது உப்பு சேர்த்து நன்றாக சலித்து கொள்ளவும் பிறகு இந்த மாவை ஒன்றோடு ஒன்று கலக்கும் வரை நன்றாக கிளறிக் கொள்ளவும்

  4. 4

    இப்போது இந்த கலவையுடன் பொடித்த சக்கரை, முட்டை அல்லது கெட்டித்தயிர் சேர்க்கவும்

  5. 5

    1/4 கப் சுடு தண்ணீரில் இன்ஸ்டன்ட் காபி தூள் கலந்து அந்த காபி தண்ணீரை இதில் சேர்க்கவும்

  6. 6

    இதனுடன் பால், எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கிளறவும் அதிகமாக கிளற கூடாது ஒன்றுடன் ஒன்று கலந்தால் போதும்

  7. 7

    இப்போது கேட்க தட்டில் இந்த கலவையை ஊற்றவும்.. ஊற்றும்போது அடுக்கடுக்காக படத்தில் காட்டியவாறு வர வேண்டும் பிறகு காற்று அடைப்பை நீக்குவதற்கான இரண்டு முறை தட்டவும் பிறகு உப்பு கொட்டி வைத்துள்ள பாத்திரத்தில் வைத்து காற்று புகாதவாறு மூடி போட்டு குறைந்த தீயில் 50 நிமிடம் வைக்கவும்

  8. 8

    கேக் வெந்து விட்டதா என்பதை அறிவதற்காக குச்சியில் குத்தி பார்க்கவும் அப்போது மாவு ஒட்டாமல் வந்தால் கேட்க வெந்து விட்டது என்று அர்த்தம் ஒருவேளை மாவு ஒட்டினால் குறைந்த தீயில் மீண்டும் 5 நிமிடம் வைக்கவும்... இப்போது கேக்கின் மேல் பால் அல்லது வெண்ணை தடவி துணியால் மூடி கேக்கை ஆறவிடவும்

  9. 9

    கேக் சாஸ் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் சல்லடை வைத்து கொக்கோ பவுடர், மைதா மாவு அல்லது சோள மாவு சேர்த்து நன்றாக சலித்துக் கொள்ளவும் பிறகு இதில் சர்க்கரை சேர்க்கவும்

  10. 10

    பால் சேர்த்து நன்றாகக் கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும் பிறகு இதை அடுப்பில் வைத்து குறைந்த தீயில் 5 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்

  11. 11

    இந்த கலவை கெட்டியானதும் அடுப்பை அணைத்து வெண்ணெய் சேர்த்து வெண்ணெய் உருகும் வரை கிளறவும் பிறகு இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆறவிடவும்

  12. 12

    கேக் நன்றாக ஆறியதும் சாக்கோஸ் சாஸ்சை தடவி விருப்பப்பட்ட சாக்லேட்டுகளை சேர்த்து அலங்கரிக்கவும்

  13. 13

    வீட்டிலேயே சுவையான சாக்லேட் கேக் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes