மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)

Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497

#mom கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், பூண்டு மிகவும் நல்லது, இதனை மீன் குழம்புடன் சேர்த்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.

மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)

#mom கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், பூண்டு மிகவும் நல்லது, இதனை மீன் குழம்புடன் சேர்த்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேர்
  1. மீன் துண்டுகள்
  2. புளிக்கரைசல்
  3. வெட்டிய வெங்காயம், தக்காளி
  4. 2பச்சைமிளகாய்
  5. 10உரித்த பூண்டு பல்
  6. மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள்
  7. நல்லெண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    மீன் துண்டுகளை நன்றாகக் கழுவி எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இவற்றை அறிந்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, வெந்தயம், சோம்பு போட்டு தாளித்து கொள்ளவும்.

  3. 3

    பின் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். இதனுடன் பூண்டு பல்லையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    நன்றாக வதக்கிய பின் ஒரு எலுமிச்சை அளவு புளி கரைசலை சேர்த்து கொள்ளவும்.

  5. 5

    அதனுடன் மல்லித்தூள் மிளகாய் தூள் இவற்றை சேர்த்துக் கொதிக்கவிடவும். பின் மீன் துண்டுகளை அதனுடன் சேர்த்து கொதிக்க.

  6. 6

    நன்கு கொதித்தவுடன் 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். மிகவும் சுவையான மீன் புளி குழம்பு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497
அன்று

Similar Recipes