ஜவ்வரிசி வடாம் (Javvarisi vadaam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஜவ்வரிசியை இரண்டு முறை கழுவி, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்ந்து நான்கு மணி நேரம் உறவைக்கவும்.
- 2
பின்னர் ஒரு அடிகனமான பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். கை விடாது கலக்க வேண்டும். மிக்ஸியில் பச்சை மிளகாய், சீரகத்தை விழுதாக அரைத்து, வடிக்கரண்டி வைத்து வடித்து கொதிக்கும் ஜவ்வரிசி கஞ்சியில் ஊற்றி நன்கு கலக்கவும். கொஞ்சம் கெட்டியானதும் ஸ்டாவ் ஆப் செய்துவிடவும்.
- 3
ஓரளவு சூடாறியவுடன் எடுத்து ஒரு வெள்ளைத்துணி அல்லது பாலிதீன் சீட் மேல் உங்கள் விருப்பம் போல் விட்டு காயவைக்கவும். நல்ல வெயில் இருந்தால் இரண்டு நாட்களில் காய்ந்து, மொறு மொறு வடாம் பொறிக்கத்தயாராகிவிடும்.
- 4
இதே முறையில் பச்சை மிளகாய், சீரகத்திற்கு பதில் மிளகாய் தூள், சீரகத்தூள் சேர்த்தும் செய்யலாம். அது தான் படத்தில் உள்ள கொஞ்சம் பழுப்பு நிறத்தில் உள்ளது.
- 5
மேலே உள்ள இரண்டு வட்ட வடிவில் உள்ள வடாம் உப்பு, நிறைய தண்ணீர் மட்டும் சேர்த்து ஜவ்வரிசி நன்கு கரையும் வரை கலந்து, ஸ்பூனில் எடுத்து ஊற்றி காயவைத்து எடுத்தது.
- 6
இந்த வடாம் ஒரு காற்று புகாத கன்டைனரில் போட்டு வைத்துக்கொண்டு, தேவைப்படும் போது எடுத்து வாணலியில் எண்ணெய் சேர்த்து நல்ல சூடானதும் போட்டு உடனடியாக எடுத்துவிட வேண்டும். ***வடாம் பொறிக்க எண்ணை சூடாக இருக்கவேண்டும். போட்டு உடனே எடுத்துவிடவேண்டும். ஜவ்வரிசிக்கலவையை கைவிடாது கலகக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.
- 7
இதுபோல் நிறைய மாற்றங்கள் செய்து வடாம் தயார் செய்யலாம். நல்ல வெயில் காலத்தில் தான் இதே போல் வடாம், பொடிகள் எல்லாம் தயார் செய்து வருடக்கணக்கில் சேமித்து வைக்க முடியும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
வால்நட் ஜவ்வரிசி கிச்சடி (Walnut javvarisi kichadi recipe in tamil)
#Walnuts Healthy Recipe Anus Cooking -
-
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை... Nalini Shankar -
-
-
ஜவ்வரிசி தோசை(javvarisi dosai recipe in tamil)
#pjஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி தோசை Lakshmi Sridharan Ph D -
-
ஜவ்வரிசி கேரட் அல்வா (Javvarisi carrot halwa recipe in tamil)
ஜவ்வரிசியில் வித்தியாசமான முறையில் அல்வா செய்துள்ளேன். Sharmila Suresh -
-
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
ஜவ்வரிசி மட்டும் வைத்து வெல்லம் சேர்த்து செய்தது. சிறிது பால், தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். #Thechefstory #ATW2 punitha ravikumar -
ஜவ்வரிசி பரோட்டா(javvarisi parotta recipe in tamil)
#PJஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசாகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி வடை (Sabudana vada) (Javvarisi vadai rceipe in tamil)
இந்த வடை மிகவும் சுவையாக இருக்கும். இது மகாராஷ்டிரா மக்களின் மிகவும் பிரசித்தி வாய்ந்த ஸ்னாக்ஸ். இதே முறையில் நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிர்ந்துள்ளேன்.#deepfry Renukabala -
-
ஜவ்வரிசி உப்புமா (Javvarisi upma recipe in tamil)
#GA4# WEEK 5# UPPMA ஜவ்வரிசியில் உப்புமா நன்றாக இருக்கும். #GA4 # WEEK 5 # UPPMA Srimathi -
ஜவ்வரிசி இட்லி(javvarisi idly recipe in tamil)
#pjஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, கூட உருளை, கொத்தமல்லி, ஸ்பைஸ் பொடிகள் ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி இட்லி அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
-
ஜவ்வரிசி போண்டா (Sabudana bonda recipe in tamil)
#Pjஜவ்வரிசி வைத்து வடை செய்துள்ளோம். எனவே இந்த முறை ஜவ்வரிசி போண்டா முயற்சித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. Renukabala -
-
பாகற்காய் சில்லி (Paakarkaai chilli recipe in tamil)
#home கசப்பு மிகுந்த பாகற்காயை சாப்பிடுவதால் வயிற்றில் பூச்சிகள் இருக்காது.... Gowsalya T -
ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா (Javvarisi paasiparuppu uppma recipe in tamil)
இந்த மழை காலத்தில் காலை நேரத்தில் இந்த ஜவ்வரிசி பாசிப்பருப்பு உப்புமா செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் #breakfast Sundari Mani -
-
#Np3 ஜவ்வரிசி போண்டா
#Np3 ஆந்திர மாநிலத்தில் ஜவ்வரிசியும், மோரும் கலந்து செய்யப்படும் மாலை நேர ஸ்நாக்ஸ் - ஸக்குபியம் புனுகுளு என்றழைக்கப்படும் ஜவ்வரிசி போண்டா Sai's அறிவோம் வாருங்கள் -
More Recipes
- பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
- மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
- வெள்ளை ரவை தக்காளி உப்புமா (Vellai ravai thakali upma recipe in tamil)
- செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
- கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)
கமெண்ட்