மூவர்ண கேக் (Moovarna cake recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

மூவர்ண கேக் (Moovarna cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 150 கிராம் மைதா
  2. 150 கிராம் பொடித்த சர்க்கரை
  3. 150 கிராம்பட்டர்
  4. 1_1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  5. 1/4 ஸ்பூன் பேக்கிங் சோடா
  6. 2 ஸ்பூன் வெனிலா எசென்ஸ்
  7. 3முட்டை
  8. 30 மில்லி சூடானபால்
  9. பச்சை புட் கலர் சிறிது
  10. ஆரஞ்சு புட் கலர் சிறிது
  11. 1/4 கப் பட்டர் க்ரீம்

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    மைதா உடன் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து இரண்டு முறை ஜலித்து கொள்ளவும்

  2. 2

    பட்டர் உடன் பொடித்த சர்க்கரை ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்

  3. 3

    பின் முட்டை உடன் வெனிலா எசென்ஸ் சேர்த்து தனியாக நன்கு பீட் செய்யவும் பின் சிறிது சிறிதாக அடித்து வைத்துள்ள பட்டர் சர்க்கரை கலவை உடன் சேர்த்து நன்கு பீட் செய்யவும்

  4. 4

    பின் பீட்டரை நிறுத்தி விட்டு ஜலித்து வைத்துள்ள மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு ஒருபுறமாக திருப்பி கலக்கவும்

  5. 5

    பின் சூடான பால் ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கவும்

  6. 6

    பின் அதை சமப்பங்காக பிரித்து கொள்ளவும் வெள்ளை ஐ அப்படியே வைத்து கொண்டு ஒன்றில் பச்சை புட் கலர் சேர்த்து நன்கு கலக்கவும்

  7. 7

    மற்றொன்றில் ஆரஞ்சு புட் கலர் ஐ சேர்த்து நன்கு கலக்கவும்

  8. 8

    பின் மூன்றையும் தனித்தனியாக பட்டர் தடவி மைதா டஸ்ட் செய்து ரெடியா உள்ள ட்ரேயில் ஊற்றி டேப் செய்து கொள்ளவும்

  9. 9

    பின் மூன்றையும் தனித்தனியாக பத்து நிமிடம் வரை சூடாக்கிய அவனை கன்வெக்ஷன் மோல்டில் மாற்றி வைத்து 30_35 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்

  10. 10

    பின் பேக் ஆன கேக் ஐ ஆறவிடவும் பின் பச்சை நிற கேக்கின் மேல் சுகர் சிரப் ஊற்றி பட்டர் க்ரீம் ஐ தடவி வெள்ளை நிற கேக் ஐ வைத்து அழுத்தவும் பின் சுகர் சிரப் ஐ ஊற்றி பட்டர் க்ரீம் ஐ தடவி ஆரஞ்சு நிற கேக் ஐ வைத்து அழுத்தவும்

  11. 11

    பின் பிரிட்ஜில் 2 மணி நேரம் வரை வைத்து எடுத்து கட் செய்து கொள்ளவும்

  12. 12

    மெதுமெதுப்பான மூவர்ண கேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes