எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
5 பேர்
  1. 1 லிட்டர்கெட்டியான பால்
  2. 2 கப்சர்க்கரை
  3. 3 கப்தண்ணீர்
  4. 1எலுமிச்சை பழம்

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    முதலில் பாலை அகலமான பாத்திரத்தில் காய வைத்து பொங்கி வரும் பொழுது அடுப்பை அணைத்துவிட்டு, அதில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாக கலந்து விடவும். பால் திரிந்து பன்னீர் தனியாக வரும்.

  2. 2

    பிறகு அதனை ஒரு துணி கொண்டு வடிகட்டி எடுக்கவும். ஒரு மணி நேரம் நன்றாக கட்டி தண்ணீர் வடிய விடவும். வடிந்த நீரை வீணாக்காமல் சப்பாத்தி மாவு பிணைய மற்ற சூப் வகைகளுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

  3. 3

    பிறகு பன்னீரை எடுத்து ஒரு பாத்திரத்தில் உதிர்த்து விட்டு நன்றாக கைகளால் அழுத்தம் கொடுத்து பிசைந்து கொள்ளலாம்.

  4. 4

    பிசைந்த மாவில், சிறு சிறு உருண்டைகளாக எடுத்து தேவையான வடிவங்களை உருட்டி கொள்ளலாம்.

  5. 5

    பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் 1 ஒரு கப் சர்க்கரைக்கு 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். சர்க்கரைப்பாகு நன்றாக கொதித்தவுடன் அடுப்பை மிதமாக வைத்து உருட்டிய உருண்டைகளை அதில் மெதுவாக சேர்த்து 20 நிமிடங்களுக்கு வேகவிடவும்.

  6. 6

    பன்னீர் உருண்டைகள் நன்றாக வெந்து பெரிதாக மாறும்வரை விடவும்.

  7. 7

    சுவையான வீட்டிலேயே செய்த ரசகுல்லா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes