ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1கப்ராகி சேமியா
  2. -1\2பெரிய வெங்காயம்
  3. 2பச்சை மிளகாய்
  4. 1கொத்துகறிவேப்பிலை
  5. 1\4ஸ்பூன்கடுகு, உளுந்து
  6. 1ஸ்பூன்எணணெய்
  7. 2கப்தண்ணீர்
  8. உப்பு- தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ராகி சேமியாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். அதிக நேரம் ஊற விடக் கூடாது. குழைந்துவிடும்

  2. 2

    பிறகு தண்ணீர் வடிய விட்டு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இட்லித் தட்டில் 7 முதல் 10 நிமிடங்கள் வேக விடவும்

  3. 3

    வெங்காயத்தை பொடிதாக நறுக்கி, பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளிக்கவும்

  4. 4

    வெங்காயத்தை சேர்த்து நன்கு வதங்கியதும் மிதமான தீயில் வைத்து வேக வைத்த ராகி சேமியாவை சேர்த்து கிளறவும்

  5. 5

    மிதமான தீயிலேயே இரண்டு நிமிடங்கள் கிளறிக் கிளறி விட்டு இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes