ஸ்ட்ராபெர்ரி ஜாம் ஹனி கேக் (Strawberry jam honey cake recipe in tamil)

Ilavarasi
Ilavarasi @cook_20176603

#bake
ஓவன் இல்லாமல் வாணலி அல்லது குக்கரிலேயே சுவை நிறைந்த மிருதுவான கேக் தயாரிக்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி ஜாம் ஹனி கேக் (Strawberry jam honey cake recipe in tamil)

#bake
ஓவன் இல்லாமல் வாணலி அல்லது குக்கரிலேயே சுவை நிறைந்த மிருதுவான கேக் தயாரிக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4கப் - மைதா
  2. 3/4கப் - சீனி
  3. 1/2கப் - எண்ணெய்
  4. 1டீஸ்பூன் - பேக்கிங் பவுடர்
  5. 1/2கப் - தயிர்
  6. 1 1/2டீஸ்பூன் - ஸ்ட்ராபெர்ரி ஃபிளேவர்
  7. 1/4கப் - தேன்
  8. 1/2டீஸ்பூன் - பேக்கிங் சோடா
  9. டாப்பிங் செய்ய
  10. 1டேபிள் ஸ்பூன் - சீனி
  11. 1/4கப் - ஸ்ட்ராபெர்ரி ஜாம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு அகலமான பாத்திரத்தில் தயிர் சலித்த மைதா,பவுடர் சுகர்,பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடர்,ஸ்ட்ராபெர்ரி ஃபிளேவர் அனைத்தையும் சேர்த்து விஸ்க்கால் நன்றாக கடைந்து கொள்ளவும்.

  2. 2

    பின்னர் கேக் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, மாவு கலவையை ஊற்றிக் கொள்ளவும்.

  3. 3

    அடுப்பில் கடாய் வைத்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் சூடாக்கி கொள்ளவும்.

  4. 4

    சிறிய ஸ்டாண்ட் வைத்து கேக் பாத்திரத்தை உள்ளே வைத்து மூடி வைக்கவும்.

  5. 5

    20 - 30 நிமிடங்கள் சிறுதீயில் வைத்திருந்து வெந்த பின் இறக்கி ஆறவைத்து கொள்ளவும்.

  6. 6

    பின்னர் சிறிய வாணலியில் சீனி,2 டீஸ்பூன் தண்ணீர் ஜாம் சேர்த்து
    வைத்திருந்து உருகியதும் தேன் சேர்த்து இறக்கி வைக்கவும்.

  7. 7

    கேக்கின் மேல் சிறிய குச்சியால் லேசாக 5-7 சிறுதுளைகள் போட்டு கொள்ளவும்.

  8. 8

    ஜாம் கரைசலை சிறிது,சிறிதாக மேலே பரவலாக ஊற்றவும்.
    10 நிமிடம் வைத்திருந்து வெட்டி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes