இனிப்பு தேங்காய் மோதகம் / தேங்காய் சாக்லேட் மோதகம் (Thenkaai chocolate mothak recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
7 பரிமாறுவது
  1. 2 கப் தேசிக்கேட்டர் கோக்கனட்
  2. 3/4 கப் கண்டன்ஸ்டு மில்க்
  3. 1 டேபிள்ஸ்பூன் நெய்
  4. சாக்லேட் சிரப் செய்ய
  5. 3 டேபிள்ஸ்பூன் டார்க் சாக்லெட்
  6. 1 டேபிள்ஸ்பூன் பால்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் நெய் விட்டு சூடானதும் தேசிக்கேட்டர் சேர்த்து 2 நிமிடம் வாசனை மற்றும் இளம் மஞ்சள் நிறம் மாறும் வரை வதக்கவும்(துருவிய தேங்காய் என்றால் 5 முதல் 7 நிமிடம் மிதமான தீயில் தண்ணீர் வற்றி உலர்ந்து போகும் வரை வறுக்கவும்)

  2. 2

    இப்போது இதில் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து ஒரு நிமிடம் மிதமான தீயில் கெட்டியாகும் வரை கிளறவும் (கண்டன்ஸ்டு மில்க் இல்லையெனில் 1 கப் பால், 1/2கப் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி கெட்டியாகி வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் வரை வதக்கவும் குறைந்தது 10 நிமிடம் ஆகும்)

  3. 3

    இப்போது கொழுக்கட்டை அச்சில் சிறிது எண்ணெய் தடவி தயாரித்து வைத்துள்ள தேங்காய் கலவையை உள் வைத்து நன்றாக அழுத்தி மெதுவாகத் திறக்கவும்

  4. 4

    2 கப் தேசிக்கேட்டர் கோக்கனட் 7 மோதக் செய்யலாம் 4 இனிப்பு தேங்காய் மோதக் மீதி 3 ஃப்ரீஸரில் 30 நிமிடம் வைக்கவும்

  5. 5

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைக்கவும் அதன் மேல் கண்ணாடி பாத்திரம் வைக்கவும் தண்ணீரும் ஒட்டக்கூடாது அதில் டார்க் சாக்லெட்டை சேர்த்து குறைந்த தீயில் மெதுவாக கிளறவும்

  6. 6

    சாக்லேட் உருகி வரும் பொழுது அதில் ஒரு டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து 30 நொடி நன்றாக கிளறி உடனடியாக இறக்கவும் (டைரி மில்க் அல்லது பால் சாக்லேட் சேர்க்கும்போது பால் சேர்க்கத் தேவையில்லை)

  7. 7

    இப்போது ஃப்ரீசரில் வைத்த தேங்காய் மோதக் மேல் இந்த சாக்லேட்டை ஊற்றி பட்டர் சீட் மேல் வைக்கவும்

  8. 8

    தேங்காய் சாக்லேட் கலவையை மறுபடியும் 30 நிமிடம் ஃப்ரீஸரில் வைக்கவும்

  9. 9

    இனிப்பு தேங்காய் மோதக் மற்றும் தேங்காய் சாக்லெட் மோதக் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes