இனிப்பு ரவை மோதகம் (Inippu ravai mothak recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

இனிப்பு ரவை மோதகம் (Inippu ravai mothak recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  1. 1 கப் ரவை
  2. 3/4 கப் காய்ச்சிய பால்
  3. 1/4 கப் சர்க்கரை
  4. 1 டேபிள்ஸ்பூன் நெய்
  5. பூரணம் செய்ய
  6. 1/4 கப் நறுக்கிய பாதம், முந்திரி
  7. 1டீஸ்பூன் நெய்
  8. 1 டேபிள்ஸ்பூன் பொடித்த சர்க்கரை
  9. 1டேபிள்ஸ்பூன் தயாரித்த ரவை கலவை
  10. சிறிதுகுங்குமப்பூ (2 டேபிள் ஸ்பூன் சூடான பாலில் குங்குமப்பூவை 30 நிமிடம் ஊற வைக்கவும் அப்போதுதான்நல்ல மஞ்சள் நிறம் வரும்)

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் நெய் விட்டு சூடானதும் ரவையை சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வறுக்கவும்... பிறகு இதில் பால் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும் பால் சேர்த்து கெட்டியானவுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக சர்க்கரை கரையும் வரை கிளறவும்

  2. 2

    பால் குங்குமப்பூ சேர்த்த கலவையை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது எடுக்கவும்

  3. 3

    சிறிய கடாயில் நெய் விட்டு சூடானதும் நறுக்கிய பாதாம் முந்திரியை நன்றாக வறுத்துக்கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் பொடித்த சர்க்கரையும் வறுத்த முந்திரி, பாதம், ரவை கலவையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  4. 4

    கொழுக்கட்டை அச்சில் நெய் தடவி ரவை கலவையை ஊள் வைக்கவும் பிறகு தயாரித்த பூரணத்தை நடுவில் வைத்து மறுபடியும் ரவை கலவையை மேல் வைத்து நன்றாக மூடி மெதுவாகத் திறக்கவும்

  5. 5

    இந்தக் கலவையில் நெய் அதிகம் ஊற்றக்கூடாது, ஊற்றினால் கேசரி பதத்திற்கு வந்துவிடும் அதனால் நெய் பால் குறைந்த அளவே ஊற்றவும் ரவை நன்றாக வெந்ததும் மட்டும் போதும்

  6. 6

    இனிப்பு ரவை மோதக் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes