ராகி சாகோ லவா கொழுக்கட்டை(Ragi Choco Lava Kolukattai recipe in tamil)

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
Nagercoil

ராகி சாகோ லவா கொழுக்கட்டை(Ragi Choco Lava Kolukattai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 கப் ராகி மாவு
  2. 1/4 கப் அரிசி மாவு
  3. 1கப் துருவிய தேங்காய்
  4. 1/2 கப் சர்க்கரை
  5. 1டீ ஸ்பூன் ஏலக்காய் தூள்
  6. 1டே ஸ்பூன் கோகோ பவுடர்
  7. 50 கிராம் பார் சாக்லேட்
  8. உப்பு தேவையான அளவு
  9. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் ராகி மாவு சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.கூடவே அரிசி மாவு சேர்த்து வறுத்து கொள்ளவும்.

  2. 2

    கடாயில் தேங்காய் பொடித்த சர்க்கரை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    நன்கு வதங்கியதும் ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி ஆறவைக்கவும்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் உப்பு சேர்த்து கொதி வரும் வரை காய்ச்சவும்.

  5. 5

    வறுத்து வைத்த மாவுடன் கோகோ பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  6. 6

    இப்போம் சூடு தண்ணீர் சேர்த்து மாவை கலந்து கொள்ளவும்.

  7. 7

    மாவு பிடிக்குற அளவு இருந்தால் நல்ல பதம்.

  8. 8

    இப்பொது மாவை கையில் வைத்து விரித்து

  9. 9

    நடுவில் ஒரு துண்டு சாக்லேட் வைத்து கூடவே பூரணம் வைக்கவும்.

  10. 10

    நன்கு உருட்டி கொள்ளவும்.படத்தில் உள்ளது மாதிரி செய்து கொள்ளவும்.

  11. 11

    இப்போம் தேங்காயில் பிரட்டி கொள்ளவும் (தேவை பட்டால்).

  12. 12

    இட்லி தட்டில் துணி போட்டு அதில் கொழுக்கட்டையை அடுக்கி.
    மூடி போட்டு ஆவியில் 10நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்.

  13. 13

    கொழுக்கட்டை வெந்துவிட்டால் பள பள என்று இருக்கும் அப்போம் ஸ்டாவ் ஆப் செய்து இறக்கி விடவும்.

  14. 14

    இப்போம் வெட்டி பாத்தா நடுவில் சாக்லேட் உருகி அருமையாக இருக்கும்.

  15. 15

    சுவையான ராகி சாகோ லவா கொழுக்கட்டை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes