வெல்லம் பிடி கொழுக்கட்டை (vellam pidi kolukattai recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#steam
இது என்னுடைய 200 வது recipie ஆகும். கோஇது வெல்லம் மற்றும் அரிசி மாவு கொண்டு கையால் பிடித்துசெய்யும் கொழுக்கட்டை ஆகும்.இந்த கொழுக்கட்டையை எங்கள் குலதெய்வம் அங்காளம்மனுக்கு வைத்து படைப்போம். அதனால் இதற்கு பெயர் நாங்கள் சொல்வது அங்காளம்மன் கொழுக்கட்டை.நமக்குப் பிடித்த காரியம் ஜெயம் ஆக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிள்ளையாருக்கு கைகளால் பிடித்து செய்வதால் இதற்கு பிடி கொழுக்கட்டை என்று சொல்வர்.மனதில் நாம் ஏதாவது ஒன்று வேண்டிக்கொண்டு ஒவ்வொரு சதுர்த்தி தினம் அன்றும் இதை செய்து பிள்ளையாருக்குப் படைத் தால் நினைத்த காரியம் நடக்கும். பிள்ளையாருக்கு பிடித்த கொழுக்கட்டை . அதனாலும் இதை பிடி கொழுக்கட்டை என்று சொல்வர். காரணப்பெயர்கள் பல உண்டு. நாம் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
5பேர்
  1. 1கப் பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு
  2. 1 கப் பொடித்த வெல்லம்
  3. 1 ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  4. 4 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
  5. 1 கப் தண்ணீர்
  6. 1ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    பதப்படுத்தப்பட்ட ஒரு கப் மாவை வெறும் வாணலியில் நன்கு சிவக்க வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கப் அளவிற்கு வெல்லத்தை பொடித்து வைத்துக் கொள்ளவும்.ஒரு ஸ்பூன் ஏலக்காய்த்தூள்4 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் நெய் எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    வானவில் வருத்த பதப்படுத்தப்பட்ட அரிசி மாவை நன்கு ஆற வைத்துக் கொள்ளவும்.இப்போது ஒரு நான்-ஸ்டிக் கடாயில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதில் ஒரு கப் வெல்லத்தை சேர்த்து நன்கு கரையும் வரை கொதிக்க வைக்கவும். பிறகு அந்த வெல்லத் தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.வடித்த தண்ணீரை மீண்டும் வாணலியில் சேர்த்து கொதிக்கவிடவும் அதில் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் ஏலக்காய் தூள் துருவிய தேங்காயை சேர்த்து கொள்ளவும். இப்போது வறுத்து ஆற வைத்த அரிசி மாவில் சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கிளறி விடவும்.

  3. 3

    வாணலியில் ஒட்டாமல் வரும் அளவிற்கு நன்கு மாவை கிளறிக் கொள்ளவும். அவை வேறு ஒரு தட்டிற்க்கு மாற்றி ஆறவிடவும். ஆர விட்டால்தான் கையில் எடுத்து பிடிக்க முடியும். ஆறியவுடன் கையில் நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவு வேண்டிய அளவிற்கு கையிலெடுத்து பிடிக்கவும்.

  4. 4

    பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் எண்ணெய் தடவி அடுக்கி வைக்கவும். பானையை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொழுக்கட்டை வைத்த இட்லி தட்டை இட்லி பானையில் வைத்து மூடவும். 10 நிமிடங்கள் வரை வேக விடவும்.பிறகு மூடியை திறந்து கொழுக்கட்டை வெந்து விட்டதா என்று சரிபார்த்துக் கொள்ளவும் ஆறிய பிறகு வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்.

  5. 5

    மிகவும் எளிதாக செய்யக்கூடிய நெய்வேதியம் ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். நீராவியில் வேகவைப்பதால் மட்டுமல்லாமல் வெல்லத்தில் இரும்புச்சத்தும் குழந்தைகளுக்கு கிடைக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes