நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen

#GA4#week15#chicken

நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)

#GA4#week15#chicken

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 minutes
2 பரிமாறுவது
  1. அரை கிலோநாட்டுக் கோழி
  2. வறுத்து அரைக்க
  3. ஒரு கப்சின்ன வெங்காயம்
  4. 1தக்காளி
  5. சிறிதளவுபட்டை
  6. 5கிராம்பு
  7. 5 ஸ்பூன்கொத்தமல்லி தூள்
  8. கறிவேப்பிலை தேவையான அளவு
  9. 2 ஸ்பூன்சோம்பு
  10. 1 ஸ்பூன்சீரகம்
  11. 5வர மிளகாய் காரத்திற்கு ஏற்ப
  12. வறுவல் தாளிக்க
  13. 2 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  14. 1பெரிய வெங்காயம் பெரியது பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  15. 4வர மிளகாய் அல்லது பச்சை மிளகாய்
  16. 1தக்காளி பொடியாக நறுக்கியது
  17. ஒரு ஸ்பூன்சிக்கன் மசாலா
  18. நல்லெண்ணெய்
  19. உப்பு தேவையான அளவு
  20. மஞ்சள் தூள் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

45 minutes
  1. 1

    முதலில் வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கடாயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். சூடு ஆறியவுடன் அரைத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி சிக்கனை சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கி பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிக்கனை வேக விடவும் சிக்கன் பாதி வெந்தவுடன் அரைத்து வைத்த விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு சிக்கன் வேகும் வரை கொதிக்க விடவும்

  4. 4

    சிக்கன் வெந்தவுடன் குழம்பை தனியாக வடித்து எடுத்துக் கொள்ளவும் அதில் கொத்தமல்லியைத் தூவி கொள்ளவும்

  5. 5

    கோழி வறுவல் செய்ய ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி-பூண்டு விழுது மற்றும் வெங்காயம் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்

  6. 6

    பின்பு அதனுடன் ஒரு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு தக்காளி வதங்கியவுடன் சிக்கன் மசாலா மற்றும் குழம்பிற்கு வறுத்து அரைத்த மசாலா 2 டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும். சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும்

  7. 7

    நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின்பு வேக வைத்த சிக்கனை சேர்த்து கொள்ளவும்

  8. 8

    தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து அது பொரிந்தவுடன் சிக்கனில் சேர்த்துக் கொள்ளவும்

  9. 9

    பின்பு நன்றாக வதக்கி கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

  10. 10

    நாட்டுக்கோழி வறுவல் மற்றும் குழம்பு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes