ரவா பைட்ஸ் (ரவா பிங்கர்ஸ்)(Rava fingers recipe in tamil)

Layaa Ulagam
Layaa Ulagam @cook_25998080
Pondicherry

குழந்தைகளுக்கு பிடித்த அருமையான ஸ்னாக்ஸ்

ரவா பைட்ஸ் (ரவா பிங்கர்ஸ்)(Rava fingers recipe in tamil)

குழந்தைகளுக்கு பிடித்த அருமையான ஸ்னாக்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பேருக்கு
  1. 1 கப்ரவை
  2. 2 கப்தண்ணீர்
  3. 2வேகவைத்த உருளைக்கிழங்கு
  4. 1 ஸ்பூன்எண்ணெய், உப்பு, சீரகம், சில்லி பிளேக்ஸ்
  5. எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
  6. டொமட்டோ சாஸ் - பரிமாற

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    1. வாணலியில் 2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும்.

  2. 2

    2. அதில் தலா 1 ஸ்பூன் எண்ணெய், உப்பு, சீரகம், சில்லி பிளேக்ஸ் சேர்க்க வேண்டும்.

  3. 3

    3. தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் 1 கப் ரவை சேர்த்து நன்றாக கிளறி வேகவைக்க வேண்டும்.

  4. 4

    4. ரவை வெந்தவுடன் அடுப்பை அணைத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஆற விட வேண்டும்.

  5. 5

    5. பிறகு, வேகவைத்த 2 உருளைக்கிழங்கை துருவி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

  6. 6

    6. சிறு துண்டுகளாக எடுத்து நன்றாக நீள வாக்கில் உருட்டி சிறு சிறு பைட் (பிங்கர்)-ஆக வெட்டி கொள்ள வேண்டும்.

  7. 7

    7. இதேபோல் அனைத்து மாவினையும் சிறு சிறு பைட் (பிங்கர்)-ஆக வெட்டி தட்டில் எடுத்து கொள்ள வேண்டும்.

  8. 8

    8. ஒரு வாணலியில் பொறிக்க தேவையான எண்ணெய் ஊற்றி, என்னை சூடானதும் அதில் சிறு சிறு பைட் (பிங்கர்)-ஐ போட்டு பொன் நிறத்தில் பொரித்து எடுக்கவும்

  9. 9

    9. ஆறிய பின் டொமட்டோ சாஸ்-வுடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Layaa Ulagam
Layaa Ulagam @cook_25998080
அன்று
Pondicherry

Similar Recipes