காலிபிளவர் சைனீஸ் (Cauliflower chinese recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#GA4
# week 3
Chinese

காலிபிளவர் சைனீஸ் (Cauliflower chinese recipe in tamil)

#GA4
# week 3
Chinese

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 பேர்
  1. 1காலிஃப்ளவர்
  2. 4டேபிள் ஸ்பூன் கார்ன்ஃபளார்
  3. 4டேபிள் ஸ்பூன்மைதா
  4. 5 பல் பூண்டு
  5. 2 பச்சை மிளகாய்
  6. 3வரமிளகாய்-ரெட் சில்லி ஃப்ளேக்ஸ்
  7. 1/2 வெங்காயம்
  8. 3 ஸ்பூன் சோயா சாஸ்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    காலிபிளவரை பூ பூவாக பிரித்து சுடு தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து தண்ணீரை வடிகட்டி வைக்கவும். நான் இதில் அஜினமோட்டோ சேர்க்கவில்லை. வெங்காயம் பூண்டை நைசாக கட் பண்ணி வைக்கவும்.

  2. 2

    ஒரு பௌலில் மைதா கார்ன்ஃப்ளார் உப்பு சிறிது சில்லி பவுடர் கால் டீஸ்பூன் சோயா சாஸ் சிறிது பூண்டு எல்லாவற்றையும் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு விடசிறிது தண்ணீராக கலந்து கொள்ளவும்.

  3. 3

    இந்த மாவில் காலிபிளவரை நனைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். காலிஃப்ளவர் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு வரும் பரவாயில்லை கடைசியாக கிளறும் போது சரியாகிவிடும்.

  4. 4

    மற்றொரு பௌலில் சிறிது எண்ணெய் விட்டு அதில் பச்சை மிளகாய் சிவப்பு மிளகாய் அரிந்த வெங்காயம் வெங்காயத் தாள் (வெங்காயத்தாள் நான் சேர்க்கவில்லை)போட்டு வதக்கவும். வெங்காயம் வாசம் போனதும் சோயா சாஸ் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்

  5. 5

    இரண்டு ஸ்பூன் கார்ன்ஃப்ளாரை சிறிது நீரில் கரைத்து சேர்த்து கொதிக்க விடவும்..பரிமாறும் பொழுது பொரித்த காலிஃப்ளவர் மீது சூடான கிரேவி ஊற்றி உடனடியாக பரிமாறவும்

  6. 6

    இது சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes