ஷாஹி துக்கடா (shahi Thukkuda recipe in Tamil)

Senthamarai Balasubramaniam
Senthamarai Balasubramaniam @cook_24912331

*இது ஒரு வட இந்திய இனிப்பு வகையாகும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

*சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.

#deepfry

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. ஒரு பாக்கெட் பிரட்
  2. அரை லிட்டர் பால்
  3. 50 கிராம் சர்க்கரை
  4. ஒரு டீஸ்பூன்கார்ன் பிளர் மாவு
  5. ஏலக்காய்த்தூள் சிறிதளவு
  6. 4 டீஸ்பூன் மில்க் பவுடர்
  7. 10முந்திரி பொடியாக நறுக்கியது
  8. 5பாதாம் பொடியாக நறுக்கியது

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    ஒரு அடிகனமான பாத்திரத்தில் அரை லிட்டர் பாலை ஊற்றி காய்ச்சவும் நன்றாக கொதித்ததும் சர்க்கரை ஏலக்காய் தூள் போட்டு கிளறவும். சிறிது பாலில் சோள மாவு மற்றும் பால் பவுடரை கரைத்து அதனுடன் சேர்த்து நன்கு வற்ற விட்டு முந்திரி பாதாம் தூவி இறக்கவும்.

  2. 2

    பிரெட்டை ஓரங்களில் கட் செய்து (படத்தில் காட்டியபடி கட் பண்ணவும்) வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை குறைத்து மிதமான சூட்டில் பிரெட்டை போட்டு பொரித்தெடுக்கவும்.

  3. 3

    பரிமாறுவதற்கு முன் பொரித்த பிரெட் துண்டுகள் மேல் பாலை ஊற்றி முந்திரி,பாதாம் தூவி பரிமாறினால் சுவையான ஷாஹி துக்கடா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Senthamarai Balasubramaniam
அன்று

Similar Recipes