நட்ஸ் தயிர் வடை (Nuts thayir vadai recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#photo.... தயிர் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.. கொஞ்சம் கூட ஹெல்த்தியாக நட்ஸ் சேர்த்து செய்து பார்த்தேன்.. ரொம்ப வித்தியாசமான சுவையுடன் இருந்தது...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப் உளுத்தம் பருப்பு
  2. 2கப் கட்டி தயிர்
  3. 1/2 கப் தேங்காய் துருவல், காரட் துருவல், ஒரு துண்டு இஞ்சி
  4. 2பச்சை மிளகாய் (காரத்துக்கேற்ப)
  5. 1/4 கப் முந்திரி
  6. 1/4 கப் பாதாம்
  7. 1ஸ்பூன் காய்ந்த திராக்ஷை
  8. 4பேரீச்சம்பழம்
  9. 1/2 கப் காரா பூந்தி
  10. உப்பு, மல்லி தழை
  11. 1/2ஸ்பூன் சீராக தூள்
  12. 1/2 ஸ்பூன் சாட் மசாலா
  13. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    உளுத்தம் பருப்பை 2மணி நேரம் ஊறவைத்து தண்ணி தெளிச்சு கட்டியாக உளுந்து வடைக்கு அரைக்கிறதுபோல் அரைத்து வைக்கவும், அத்துடன் 1ஸ்பூன் அரிசி மாவு உப்பு கலந்து வெக்கவும்

  2. 2

    ஒரு பவுலில் நட்சை பொடியாக கட் செய்து வெச்சுக்கவும், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, 5 முந்திரிசேர்த்து மிக்ஸில் கொஞ்சம் பால் விட்டு நைசாக அரைத்துக்கவும். அரைத்த விழுதை தயிரில் தேவையான உப்பு சேர்த்து கலந்து வெச்சுக்கவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கரண்டி பால், ஒரு கரண்டி மோர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு இறக்கி வெச்சுக்கவும்.எண்ணெய் காய்ந்ததும் கையில் வடை மாவை எடுத்து ஒரு ஸ்பூன் நட்ஸ் உள்ளே வைத்து மூடி லேசாக தட்டி எண்ணையில் போட்டு இரண்டு பக்கம் திருப்பி போட்டு மொறு மொறுன்னு சிவந்ததும் எடுத்து வைத்திருக்கும் தயிர் கலவயில் போட்டு ஊற விடவும்

  4. 4

    ஊறின வடைகளை எடுத்து தட்டில் (serving bowl)அடுக்கி மேல் தயிர் விட்டு அதுக்கு மேலே காரட் துருவல், சீரகதூள், சாட் மசாலா, மல்லிதழை தூவி கடைசியில் மேலே காரா பூந்தி சேர்த்து பரிமாறவும்.. ரொம்ப சாப்டடாகவும், நட்ஸின் லேசான இனிப்புடனும் சுவை பிரமாதமாக இருக்கும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes