ஆந்திரா ரசம் (Anshra rasam recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

இந்த ரசம் சற்று வித்தியாசமாக செய்தது.ப்ரஷ் க்ரவுண்ட் மசாலா அரைத்து ,வாசனையாகவும்,காரமாகவும் இருக்கும். #ap

ஆந்திரா ரசம் (Anshra rasam recipe in tamil)

இந்த ரசம் சற்று வித்தியாசமாக செய்தது.ப்ரஷ் க்ரவுண்ட் மசாலா அரைத்து ,வாசனையாகவும்,காரமாகவும் இருக்கும். #ap

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
6பேர்
  1. 20கி புளி
  2. 2தக்காளி
  3. உப்பு தேவையான அளவு
  4. 2டீஎண்ணெய்
  5. 1/2டீமஞ்சள் தூள்
  6. பெருங்காயத்தூள்- சிறிது
  7. தாளிக்க
  8. 1/2டீகடுகு,உ.பருப்பு
  9. அரைக்க
  10. 1/2டீமிளகு
  11. 1/2டீசீரகம்
  12. 1கா.மி
  13. 3ஆர்க்கறிவேப்பிலை
  14. 8பல்பூண்டு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் புளி கரைத்து ஊற்றி தக்காளி சேர்த்து 7 நிமிடம் வேக விடவும். ஆறிய பிறகு கையால் கரைத்து வடிகட்ன மாதிரி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி, மறுபடியும் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி ஊற்றவும்.

  2. 2

    தண்ணீர் பார்த்து சேர்த்து கொள்ளவும். இப்போது மிக்ஸியில் மிளகு,சீரகம், மிளகாய், தோலுடன் பூண்டு, இரண்டு சுற்றி கடைசி கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து வைக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய்-2டீஸ்பூன் ஊற்றி கடுகு, உ.ப,தாளித்து அரைத்தவிழுது சேர்த்து 1நிமிடம் வதக்கி புளி கரைசல் சேர்த்து கொத்தமல்லி சிறிது,ம.தூள், பெ.தூள் சேர்த்து மூடி போட்டு கடாயில் சுற்றிவர நுரை வந்தவுடன் அடுப்பை அனைக்கவும்.

  4. 4

    சட்டியில் உப்பை போட்டு ரசத்தை ஊற்றவும்.சுடச்சுட சாதத்தில் போட்டு சாப்பிட அருமை யோ அருமை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes