செப்பல புலுசு (Andhra fish curry) (Cheppala pulusu recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

ஆந்திராவில் மீன் குழம்பு சற்று காரசாரமாக இருக்கும். மசாலா பொருட்கள் வறுத்து அரைத்து செய்தேன்,நல்ல வாசனையாக இருந்தது. #ap

செப்பல புலுசு (Andhra fish curry) (Cheppala pulusu recipe in tamil)

ஆந்திராவில் மீன் குழம்பு சற்று காரசாரமாக இருக்கும். மசாலா பொருட்கள் வறுத்து அரைத்து செய்தேன்,நல்ல வாசனையாக இருந்தது. #ap

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
5 பேர்
  1. 300கி மீன்
  2. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  3. 1பெரிய தக்காளி
  4. 1 டேபிள் ஸ்பூன் சில்லி பவுடர்
  5. 1 டேபிள் ஸ்பூன்தனியா பவுடர்
  6. 50 கி புளி
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய்-6டேபிள் ஸ்பூன்
  9. அரைக்க
  10. 2 பெரிய வெங்காயம்
  11. 2 ப.மி
  12. வறுத்து அரைக்க
  13. 1 டேபிள் ஸ்பூன் தனியா
  14. 7 பூண்டு
  15. 1/2டீஸ்பூன் வெந்தயம்
  16. 6கா.மி
  17. தாளிக்க
  18. 1 டீஸ்பூன்கடுகு
  19. 1/4டீஸ்பூன்வெந்தயம்
  20. கறிவேப்பிலை-சிறிது

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    மீனை சுத்தம் செய்து சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.

  2. 2

    வறுத்து அரைக்க உள்ள பொருட்களை ட்ரை ரோஸ்ட் மிதமான தீயில் வறுத்து பொடியாக அரைத்து வைக்கவும். வெங்காயம், ப.மி தனியாக அரை க்கவும்.

  3. 3

    மண்சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம்,கறிவேப்பிலை தாளித்து வெங்காய விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் மஞ்சள் தூள், தக்காளி சேர்க்கவும்.

  4. 4

    நன்கு வதங்கிய பின் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கி,உப்பு,புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும் 3நிமிடம் கழித்து மீன் சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.

  5. 5

    இப்போது அரைத்து வைத்திருக்கும் பொடி சேர்த்து மூடி போட்டு இரண்டு நிமிடம் கழித்து கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

  6. 6

    நம் ஆந்திர மீன் குழம்பு சுவைக்க ரெடி, சப்பு கொட்ட வைக்கும் மீன் குழம்பு நீங்களும் செய்து பாருங்க.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes