கண்டி பச்சடி (Kandi pachadi recipe in tamil)

#ap
இது நம் ஊரில் செய்யபடும் பருப்பு துவையல் போன்றது.என் அம்மா செய்வார்கள்.ஆனால் எப்படி செய்வார்கள் என்று எனக்கு தெரியாது. நாம் தாளிதம் சேர்க்க மாட்டோம்.ஆந்திரா மக்கள் தாளித்து சேர்கிறார்கள்.மற்றும் இந்த துவயலுக்கு வெல்லம் சேர்கிறார்கள்.நான் வெல்லம் சேர்க்கவில்லை.
கண்டி பச்சடி (Kandi pachadi recipe in tamil)
#ap
இது நம் ஊரில் செய்யபடும் பருப்பு துவையல் போன்றது.என் அம்மா செய்வார்கள்.ஆனால் எப்படி செய்வார்கள் என்று எனக்கு தெரியாது. நாம் தாளிதம் சேர்க்க மாட்டோம்.ஆந்திரா மக்கள் தாளித்து சேர்கிறார்கள்.மற்றும் இந்த துவயலுக்கு வெல்லம் சேர்கிறார்கள்.நான் வெல்லம் சேர்க்கவில்லை.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் துவரம்பருப்பு எடுத்துக் கொள்ளவும் ஆறு அல்லது ஏழு வரமிளகாய் எடுத்துக் கொள்ளவும் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் கொத்தமல்லி, மற்றும் 10 பல் பூண்டு உரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு கோலி குண்டு அளவு புளி எடுத்துக்கொள்ளவும்.தேவையான அளவு உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்துக்கொள்ளவும். தாளிக்கத் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
முதலில் வெறும் வாணலியில் துவரம்பருப்பை நன்கு வாசம் வரும் வரை சிவக்க வறுத்துக்கொள்ளவும். தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் வரக்கொத்தமல்லி, சீரகம், மிளகாய், புளி, பூண்டு 5 பல், சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
வருத்த துவரம்பருப்பை மிக்ஸியில் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் மஞ்சள் தூள், மீதி பூண்டுப்பல்,உப்பு, தங்களுக்கு விருப்பம் என்றால் சிறிது வெல்லம் சேர்த்து மீண்டும் மிக்ஸியை ஓட விடவும். இவற்றுடன் வறுத்து வைத்த பொருட்களை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து துவையலாக அரைத்து கொள்ளவும்.நான் கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக் கொண்டேன். தங்களுக்கு தேவையான படி அரைத்துக் கொள்ளவும்.
- 4
அரைத்த துவையலை ஒரு கப்பில் மாற்றி கொள்ளவும்.வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து துவையலில் சேர்த்துக்கொள்ளவும். சுவையான கண்டி பச்சடி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உள்ளிபாயா பச்சடி 🍗 (Ulli paayaa pachadi recipe in tamil)
#apகேரள மக்கள் உணவில் காய்கறிகள் அதிகம் இருக்கும். ஆந்திரா மக்கள் உணவு வகைகள் மிகவும் காரசாரமாக இருக்கும். இந்திய மாநிலங்களில் மொழி,பண்பாடு, கலாச்சாரங்கள் மாறுபட்டு இருப்பது போலவே உணவு பழக்கங்களும் மாறுபட்டவை.ஆனாலும்,ஒவ்வொரு மாநில மக்களும் பிற மாநிலத்தவர் உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள்.உலகம் முழுவதிலும் நம் இந்தியர்களின் எல்லா உணவுகளும் பிரத்யோகமாக கிடைக்கும்.அந்த அளவிற்கு இந்தியரின் உணவு வகைகள்,பாரம்பரிய ருசி கொண்டவை. அதுவும் நம் தமிழ்நாடு ஒரு படி மேல். மாவட்டம் வாரியாக புகழ் பெற்ற உணவு வகைகள் உண்டு.திருநெல்வேலி,காரைக்குடி, கும்பகோணம் காஞ்சீபுரம் என்று சொல்லி கொண்டே போகலாம்.இட்லி,சாம்பார்,பொங்கல்,வடைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.ஆந்திரா கோங்குரா சட்னி,கேரள புட்டு_ கடலை குழம்பு,கர்நாடகா மைசூர் மசால் தோசை இப்படி சொல்லி கொண்டே போகலாம். Meena Ramesh -
-
கொட்டிமீரா பச்சடி (Kottimeera pachadi recipe in tamil)
ஆந்திராவில் கொத்தமல்லி இலைகள் வைத்து செய்யும் காரசார துவையல். #ap Azhagammai Ramanathan -
-
-
-
கொட்டு புளிரசம்🥣🥣 (Kottu puli rasam recipe in tamil)
#arusuvai4 இந்த ரசம் என் அம்மா கற்றுக் கொடுத்தார். ரசம் வகைகள் ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும். உரலில் கொட்டி வைப்பதால் இதற்கு கொட்டு புளிரசம் என்று பெயர். Hema Sengottuvelu -
கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)
#arusuvai2 எந்த கீரையிலும் பருப்பு சேர்த்து குழம்பு வைக்கலாம். இது அரைக்கீரையில் செய்த பருப்பு குழம்பு. எப்போதும் கீரைக்கூட்டு கீரை பொரியல் கீரை மசியல் கீரை கடைசல் என்று செய்வதை தவிர்த்து ஒருமுறை இப்படி செய்து பார்க்கலாம். Meena Ramesh -
-
தேங்காய் பூண்டு காரச் சட்னி(coconut) (Thenkaai poondu kaara chutney recipe in tamil)
#arusuvai2 #goldenapron3இந்த சட்னி என் கணவருக்கும், என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். என்னம்மா சொல்லிக் கொடுத்தது. பத்தே நிமிடங்களில் தயாரித்து விடலாம்.சுடச்சுடஇட்லி தோசைக்கு இந்தச் சட்னியை நல்லெண்ணெய் சேர்த்து தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
கொத்சு/Besan (Kothsu recipe in tamil)
#goldenapron3கொத்சு இட்லி தோசை, பூரி சப்பாத்தி போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். இது மசாலா செய்வதில் சிறிது வேறுபட்டது. கள்ள மாவு சேர்த்து செய்ய வேண்டும். Meena Ramesh -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
கிளாக்காய் சாம்பார்😋 (Kalakkaai sambar recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு மசைக்கையின் போது பருப்பு பிடிக்காது.ஆனால் பருப்பு புரோட்டீன் கொண்டிருப்பதால் பருப்பு உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். கிலாக் காய் புளிப்பு சுவை மிகுந்தது.மேலும் மசைக்கை காரணமாக ஏற்படும் வாந்தியை கட்டு படுத்த கூடிய சுவை உடையது.பருப்பில் இந்த காயை இரண்டாக அரிந்து விதை எடுத்து சேர்த்து உப்பு காரம் கொஞ்சம் அதிகமாக சேர்த்து சாம்பார் வைத்து குடுத்தால் கர்ப்பிணி பெண்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
நெல்லூர் பப்பு டொமேடோ (Nellore pappu tomato recipe in tamil)
உண்மையில் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது, ரசித்து உண்டார்கள். #ap Azhagammai Ramanathan -
-
-
-
கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)
#momகீரை பொதுவாகவே எல்லாருடைய உடல் நலததிற்கும் நல்லது.அதுவும் கற்பமுற்ற காலத்தில் பெண்கள் கட்டாயம் உணவில் கீரை சேர்த்து கொள்ள வேண்டும்.எதுவும் இந்த தருணத்தில் புளிப்பாக இருந்தால் சாப்பிட வாய்க்கு நன்றாக இருக்கும்.கீரையில் தக்காளி ஒன்றுக்கு இரண்டாக சேர்த்து கடைந்தால் வாய்க்கு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
அனைத்து வயதினருக்கும் மிகவும் ஆரோக்கியமான உணவு #breakfast Siva Sankari -
ரோசாப்பூ சட்னி/onion (Rosapoo chutney Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 # bookஇந்த ரோசாப்பூ சட்னி செட்டிநாடு வகை சட்னி ஆகும். என்னுடைய அம்மா எனக்கு பிடிக்கும் என்றுசெய்து தருவார்கள். எனக்கு இதன் செய்முறை தெரியாது. 32 வருடங்களுக்குப் பிறகு மும்பையில் உள்ள என் கல்லூரி தோழி மூலம் இதன் செய்முறையை தெரிந்து கொண்டேன்.தக்காளியில் விட்டமின் ஏ 16% விட்டமின் சி 22% விட்டமின் பி 5% உள்ளது மற்றும் இரும்பு கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளது சோடியம் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளது உள்ளது. தக்காளியில் ஜூஸ் மற்றும் சாஸ் பொருட்களை தயாரிக்கலாம். மற்றும் தக்காளி பொருட்கள் இதய நோய் மற்றும் பல புற்று நோய்களின் அபாயத்தை குறைக்கிறது இந்த பழம் சரும ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இது வெயிலில் இருந்து பாதுகாக்கும்.தக்காளியுடன் வெங்காயம் சேர்த்து செய்த சட்னி ஆகும் இது இட்லி தோசை மற்றும் சப்பாத்திக்கு சுவையாக இருக்கும். Meena Ramesh -
புளிச்சக்கீரை பச்சடி (Pulichakeerai pachadi recipe in tamil)
#arusuvai4 புளிச்ச கீரையில் தாதுபொருட்களும், இரும்பு சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. இது தவிர வைட்டமின் சத்துக்களும் கணிசமான அளவு கலந்துள்ளன. எல்லாவிதமான வாத கோளாறுகளையும் குணப்படுத்தும் வல்லமை இந்த கீரைக்கு உண்டு .காசநோயை குணமாக்கும் இந்த கீரை ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் முதலிடம் வகிக்கிறது. உடல் உஷ்ணத்தை எப்போதும் சீராக வைத்திருக்க உதவுகிறது. அதனால்தான் இந்தகீரையை உடலுக்கும், குடலுக்கும் வளமூட்டும் கீரை என்பார்கள். BhuviKannan @ BK Vlogs -
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#chutneyகுடைமிளகாய் கண்ணுக்கு நல்லது. Meena Ramesh -
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
கத்தரிக்காய் சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
#Ga4கத்திரிக்காய் சட்னி இட்லி,தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். கத்திரிக்காயை சுட்டு பிறகு சட்னியாக அரைக்க வேண்டும். Meena Ramesh -
ஆந்திர தக்காளி பச்சடி. (Andhra thakkali pachadi recipe in tamil)
#ap.. ஆந்திர மாநிலத்தின் ரொம்ப பிரபலமான டீஷ்... Nalini Shankar -
குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
குண்டூர் இட்லி பொடி மிகவும் சுவையாக இருக்கும் ஆந்திரா ஸ்டைல் பொடி. இது பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து செய்யக்கூடியது.#ap Renukabala -
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala -
-
-
ஆந்திரா தக்காளி பருப்பு கடையல் (Andhra Thakkaali Paruppu kadayal recipe in Tamil)
#ap* ஆந்திராவில் மிகப்பிரபலமாக செய்யப்படுவது இந்த பருப்பு கடையல்.*இதனை தக்காளி பப்பு என்று அழைப்பார்கள். kavi murali
More Recipes
- Pappula kajjikayalu (Pappula kajjikayalu recipe in tamil)
- கும்மிடிகாய புலுசு(Yellow pumpkin tamarind curry) (Kummidikaaya pulusu recipe in tamil)
- ஆந்திரா ஸ்ட்ரீட் புட் மிரபகாய(mirchi) பஜ்ஜி (Andhra street food mirapakaya bajji recipe in tamil)
- கறிவேபாகு காரம் (Karivepaaku karam recipe in tamil)
- பல்லி சட்னி (வேர்கடலை சட்னி) (Palli chutney recipe in tamil)
கமெண்ட் (2)