சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசி ஐ வெதுவெதுப்பான நீரில் 30 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தண்ணீரை வடிகட்டி 2 ஸ்பூன் நெய் விட்டு இரண்டு மூன்று நிமிடங்கள் வரை மெல்லிய தீயில் வைத்து வதக்கி கொள்ளவும்
- 2
வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும் (இத வறுக்கறதுல தான் பிரியாணி உடைய மணமே இருக்கிறது அடுப்பை மெல்லிய தீயில் வைத்து நிதானமாக ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக வறுத்து எடுக்க வேண்டும்)
- 3
அடி கணமான வாணலியில் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாச்சி பூ பிரியாணி இலை மற்றும் சோம்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்
- 4
பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், பச்சை வாசனை போனதும் நறுக்கிய புதினா இலை ஐ சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
பின் அரைத்த தக்காளி (தக்காளி நன்கு பழுத்த சிவப்பு நிறத்தில் இருப்பது நல்லது பிரியாணிக்கு கூடுதலாக நிறத்தை கொடுக்கும்)
- 6
பின் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் வறுத்து அரைத்த பொடி சேர்த்து நன்கு வதக்கவும், பின் சுத்தம் செய்து அலசிய மட்டனை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
பின் தயிர் சேர்த்து அரைத்த முந்திரி பாதாம் விழுதை சேர்த்து கூட இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு வதக்கவும் 20 நிமிடங்கள் வரை அடுப்பை மெல்லிய தீயில் வைத்து வதக்கவும்
- 8
பின் நெய்யில் வதக்கி வைத்துள்ள அரிசியை சேர்த்து லெமன் சாறு விட்டு 2 ஸ்பூன் நெய் விட்டு நன்றாக கிளறவும் பின் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து மூடி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்
- 9
பின் 10 நிமிடம் கழித்து திறந்து மீதமுள்ள நெய்யை ஊற்றி கொத்தமல்லி தழை தூவி (விருப்பட்டா இதில் வறுத்த முந்திரி மற்றும் பொரித்த வெங்காயம் சேர்த்து கொள்ளவும்) திரும்பவும் மூடி மேலே கணமான கல் அல்லது சப்பாத்தி கட்டையை வைத்து அடுப்பை குறைந்த தீயில் 15 நிமிடங்கள் வரை வைக்கவும்
- 10
பின் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டிலே ஐந்து நிமிடம் வரை வைத்து திறந்து அரிசி உடையாமல் மெதுவாக கிளறி பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும்
- 11
சுடச் சுடச் பிரியாணி ரெடி தயிர் பச்சடி உடன் சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#Arusuvai4#goldenapron3 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
வெஜ் மஷ்ரூம் பிரியாணி 2 (Veg mushroom biryani recipe in tamil)
#Arusuvai4இந்த பிரியாணி விறகு அடுப்பு இல்லாம நெருப்பு துண்டுகள் இல்லாம வீட்டிலே எளிதாக தம் போட கூடியது இந்த செய்முறை அசைவத்தில் செய்தால் என்ன மணம் ருசி இருக்குமோ அது அப்படியே இந்த வெஜ் மஷ்ரூம் பிரியாணி ல இருக்கும் தயிர் உடன் சேர்த்து ஊறவைக்கும் போது அந்த சுவை நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
கேரட் தொக்கு
#GA4#week3 இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு வித்தியாசமான ரெசிபி கலர் எதுவும் தேவை இல்லை காஷ்மீர் மிளகாய்த்தூள் தேவை இல்லை இயற்கையாகவே பார்ப்பதற்கு நல்ல நிறத்தையும் ருசியில் வித்தியாசத்தையும் கொடுக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
சீரக சம்பா சிக்கன் பிரியாணி
சீராகா சம்பாவுடன் பிரியாணி சின்னமானவர். தெற்கில் பலருக்கு, குறிப்பாக திண்டுக்கலில் சீராகா சம்பா இல்லாமல் பிரியாணி இல்லை. முயற்சி செய்து, இது உங்களுக்கு எவ்வாறு வேலை செய்கிறது என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். #goldenapron3 #book Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
கோஸ்கோட் கிராமத்து பிரியாணி(Hoskote village Briyani)
#Karnadakaகர்நாடக மாநிலம் கோஸ்கோட் என்ற கிராமம் விவசாய நிலமாக இருப்பதனால் அங்கு விளைவிக்கும் நாட்டு காய்கறிகளை பயன்படுத்தி செய்யக்கூடிய பிரியாணி மிகவும் பிரபலமானது .அந்த முறையை இந்த பதிவில் காண்போம் karunamiracle meracil -
-
பிரியாணி (Briyani recipe in Tamil)
#Vattaram* சென்னையில் கமகம வாசனையுடன் அனைத்து ஓட்டல்களிலும் பரிமாறுவது இந்த பிரியாணி. kavi murali
More Recipes
கமெண்ட் (4)