எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15-20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 4உருளைக்கிழங்கு
  2. 3/4 கப் பட்டாணி (6-8 மணி நேரம் ஊற வைக்கவும்)
  3. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  4. கடுகு
  5. 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  6. 1/2 டீஸ்பூன் உளுந்து
  7. 1/4 டீஸ்பூன் சோம்பு
  8. 2நறுக்கிய வெங்காயம்
  9. 2 பச்சை மிளகாய்
  10. 1/2நறுக்கிய தக்காளி
  11. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  12. 3/4 டீஸ்பூன் தனியாத்தூள்
  13. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  14. உப்பு
  15. நறுக்கிய கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

15-20 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் ஊற வைத்த பட்டாணி தோல் நீக்கிய உருளைக்கிழங்கு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 3 விசில் வேக வைக்கவும் வெந்த பிறகு தண்ணீர் வடித்து மசித்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து, சோம்பு தாளிக்கவும் பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு அரை தக்காளியை சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்

  3. 3

    தக்காளி மசித்த பிறகு இதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி மசித்து வைத்த உருளைக்கிழங்கு பட்டாணியை சேர்த்து நன்றாக கிளறவும் பிறகு 1 கப் தண்ணீர் சேர்க்கவும்

  4. 4

    உப்பு சேர்த்து மூடி குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

  5. 5

    ஆலு மட்டர் சாகு தயார்

  6. 6

    ❤️🥰🥰🥰

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes