உருளைக்கிழங்கு ஆம்லெட்

Jaya Kumar
Jaya Kumar @cook_26377999

#GA4 பலவிதமான ஆம்லெட் சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் எது நல்ல புரதச்சத்து நிறைந்தது உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து அத்துடன் மற்ற பொருள்கள் சேர்த்து செய்வதினால் காலை உணவாக கூட இதை உட்கொள்ளலாம் குழந்தைகளுக்கு பள்ளிக்குக் கொடுத்து அனுப்பலாம் மிகவும் ருசியானது சத்தானது முயன்று பார்த்து கூறுங்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10நி
2 பரிமாறுவது
  1. வேக வைத்த உருளைக்கிழங்கு ஒன்று
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம் அரை கப்
  3. தக்காளிச் சாறு 2 ஸ்பூன்
  4. பாலக்கீரை பொடியாக நறுக்கியது சிறிதளவு
  5. சீரகத்தூள் மிளகுத்தூள் தலா ஒரு ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  7. எண்ணெய்
  8. உப்பு
  9. மல்லி கருவேப்பிலை பொடியாக நறுக்கியது
  10. கேரட் துருவல் 2 ஸ்பூன்
  11. முட்டை

சமையல் குறிப்புகள்

10நி
  1. 1

    வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து வைக்கவும் அதில் ஒரு முட்டை நறுக்கிய வெங்காயம் கேரட் துருவல் சீரகம் மிளகுத்தூள் மஞ்சள்தூள் உப்பு நறுக்கிய கீரை எல்லாம் சேர்த்து நன்கு அடித்து வைக்கவும்

  2. 2

    அடுப்பில் தோசை கல் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் நன்கு அடித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி மூடி வைத்து வேகவிட்டு திருப்பிப்போட்டு எடுக்கவும்

  3. 3

    நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும் சுவையான புதுவிதமான உருளைக்கிழங்கு ஆம்லெட் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jaya Kumar
Jaya Kumar @cook_26377999
அன்று

Similar Recipes