வெந்தய டீ

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

#GA4 #Fenugreek #Week2
வெந்தயம் மிக எளிதில் கிடைக்க கூடிய பொருள் என்பதால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை.அதிக இரும்பு சத்து,நார் சத்து,புரத சத்து உள்ள இந்த சின்ன (வெந்தய) விதையை நாம் அதிக அளவில் உதாசீன படுத்துகிறோம்.ஆனால் அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது...
அதில் ஒரு உணவு முறையை இவ்விடத்தில் செய்து பார்க்கலாம்.
இது செய்வதற்கு ரொம்பவும் சுலபமான ஒன்று தான் வெந்தய டீ....

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 நபர்
  1. வெந்தயம் 2 ஸ்பூன்
  2. சுக்கு 2 சிட்டிகை
  3. புதினா சிறிதளவு
  4. தேன் 6 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.பிறகு அதனுடன் 2 ஸ்பூன் வெந்தயத்தை போட்டு 4 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும்.

  2. 2

    கொதித்த பிறகு அதில் சிறிதளவு புதினாவை போடவும்.போட்ட பின்னர் அதில் சுக்கையும் ஒன்று இரண்டாக தட்டி சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விடவும்.

  3. 3

    அடுப்பை அணைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றி வடிகட்டி எடுத்து கொள்ளவும்

  4. 4

    பின்னர் ஒரு பௌலில் ஊற்றி அதனுடன் ஒரு பௌலிற்கு 3 ஸ்பூன் என தேன் சேர்த்து கலக்கி விடவும்

  5. 5

    பிறகு புதினாவை மேலே தூவி பரிமாறவும். உடல் சூட்டை தணிக்கும் வெந்தய டீ 5 நிமிடத்தில் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Top Search in

எழுதியவர்

தயா ரெசிப்பீஸ்
அன்று
Coimbatore

Similar Recipes