அகர் அகர் ஹல்வா

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#cookwithmilk
பாலைக் கொண்டு செய்யப்படும் மிகவும் சுவையான இனிப்பு அகர் அகர் ஹல்வா.இது உடல் உஷ்ணத்தை குறைக்கும் காரணத்தால் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்கும் மாதத்தில் இதனை தவறாமல் சாப்பிடுவர்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 1/2 மணி நேரம்
10 நபர்
  1. பால் 1 1/2 லிட்டர்
  2. அகர் அகர் 16 கிராம்
  3. சர்க்கரை ஒன்றரை கப்
  4. இட்லி சோடா ஒரு சிட்டிகை
  5. பச்சை, சிவப்பு கலர்- தலா ஒரு சிட்டிகை
  6. அலங்கரிக்க:
  7. பாதாம்,முந்திரி தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

1 1/2 மணி நேரம்
  1. 1

    அகர் அகரை ஒன்று இரண்டாக பிச்சு நன்கு கழுவி வடிகட்டி அரை லிட்டர் காய்ச்சிய பாலில் ஒரு மணி நேரம் ஊற விடவும். ஒரு சிட்டிகை இட்லி சோடாவும் சேர்க்கவும்.இவ்வாறு சேர்ப்பதனால் அகர் அகர் அடுப்பில் சமைக்கும் பொழுது பால் திரியாமல் இருக்கும்.

  2. 2

    இப்பொழுது ஒரு லிட்டர் பாலை அடுப்பில் காய வைக்கவும். பால் பொங்கி வந்த பின் மிதமான தீயில் நன்றாக சுண்ட விடவும்.

  3. 3

    சுண்டிய பால் 200 மில்லி அளவு வரும்பொழுது அகர் அகர் ஊற வைத்த பாலை இதில் சேர்க்கவும்.இந்தக் கலவையை கிளறிக் கொண்டே இருக்கவும் அகர் அகர் நன்கு கரைந்த பின் எடுத்து வைத்துள்ள சர்க்கரையை சேர்த்து கரைய விடவும்.

  4. 4

    சர்க்கரை நன்கு கரைந்த பின் இந்த கலவையில் மூன்றில் ஒரு பங்கை ஒரு கிண்ணத்தில் எடுத்து பச்சை ஃபுட் கலரை கலக்கவும். அச்சமயம் மீதி கலவையை அடுப்பில் மிதமான தீயில் வைக்கவும்.

  5. 5

    இந்த பச்சை கலவையை நெய் தடவிய தட்டில் ஊற்றி 5 நிமிடம் காத்திருக்கவும்.பிறகு அடுப்பில் இருக்கும் கலவையிலிருந்து மற்றும் ஒரு பங்கை எடுத்து வெள்ளை நிறத்தில் இருக்கும் அதை பச்சை கலவையின் மீது ஊற்றவும். அதன்பின் மற்றும் ஒரு ஐந்து நிமிடம் காத்திருக்கவும். இறுதியில் கடைசி பங்கில் சிவப்பு ஃபுட் கலரை கரைத்து நெய் தடவிய தட்டில் ஊற்றவும்.

  6. 6

    இவ்வாறு ஃபுட் கலர் சேர்க்காமல் முழுவதும் வெள்ளை நிறமாகவும் இந்த இனிப்பை செய்யலாம். இம்மூன்று வண்ணங்களும் நம் தேசியக்கொடியின் வண்ணங்கள் ஆகும் ஆகவே குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற தினங்களில் நடத்தப்படும் போட்டிகளில் இந்த ஹல்வாவை செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

  7. 7

    மூன்று கலவைகளையும் ஊற்றியபின் குறைந்தது இரண்டு மணி நேரம் அப்படியே விடவும். அதன்பின் இது நன்கு ஹல்வா பதத்திற்கு இறுகி விடும் அதன் பின் இதனை வேண்டிய வடிவத்தில் வெட்டி பரிமாறலாம். பரிமாறும் நேரத்தில் நறுக்கிய பாதாம்,முந்திரி அல்லது தேவையான நட்ஸ் கொண்டு பரிமாறலாம். மேலும் இரண்டு நாட்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்ணலாம். கண்கவரும் வண்ணங்களில் மிகவும் சுவையான அகர் அகர் அல்வா தயார். வாருங்கள் அனைவரும் உண்டு மகிழலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes