மைசூர் பாக்

டிரெடிசனல் முறையில் செய்த மைசூர்பா 20 நாட்கள் வரை கெடாமல் நன்றாக இருக்கும்
மைசூர் பாக்
டிரெடிசனல் முறையில் செய்த மைசூர்பா 20 நாட்கள் வரை கெடாமல் நன்றாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும் நான் படத்தில் காட்டியுள்ள அந்த சின்ன கப்பில் அளந்துள்ளேன்
- 2
சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் வரை கலந்து கொண்டு பின் அடுப்பை பற்ற வைத்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும், சர்க்கரை கரைந்ததும் மெல்லிய தீயில் வைத்து பாகு பதம் வரும் வரை கிளறிவிடவும்
- 3
ஒரு கம்பி பதத்திற்கு ஒரு நிமிடம் முன்பு கடலைமாவை சிறிது சிறிதாக தூவி நன்கு கிளறவும் (கம்பி பதம் வர வேண்டியதில்லை கைகளில் தொட்டு பார்த்தால் கம்பி வந்ததுமே உடையும் அதுவே பதம்)
- 4
சர்க்கரை பாகில் கடலைமாவு நன்கு கட்டியில்லாமல் கலந்து வெந்து திக்காக வரும் வரை கிளறிவிடவும் (அடுப்பை மெல்லிய தீயில் வைத்தே செய்ய வேண்டும்) இதற்கிடையில் பக்கத்து அடுப்பில் எண்ணெய் மற்றும் வனஸ்பதி ஐ ஒன்றாக சேர்த்து சூடாக்கவும்
- 5
பின் சூடான எண்ணெயை சிறிது சிறிதாக கரண்டியால் எடுத்து ஊற்றி நன்கு கிளறவும் தொடர்ந்து ஊற்ற கூடாது ஒருமுறை ஊற்றியதை மாவு நன்கு உள் இழுத்ததும் அடுத்த கரண்டி எண்ணெயை ஊற்ற வேண்டும் இப்படியே சூடான எண்ணெய் வனஸ்பதி கலவை முழுவதையுமே ஊற்ற வேண்டும் (தவறாமல் ஒவ்வொரு முறையும் உள் இழுத்த பின் ஊற்றவும்)
- 6
கடலைமாவு நன்கு வெளுத்து நிறம் மாறி வரும், வெந்ததும் நன்கு கிளற கிளற மணம் வர ஆரம்பிக்கும்,கைவிடாமல் தொடர்ந்து மெல்லிய தீயில் வைத்து கிளறவும் லேயர் லேயராக நன்கு பிரிந்து வரும்
- 7
உள் இழுத்த எண்ணெய் சிறிது வெளியே கசிந்து ஒட்டாமல் சுருண்டு வரும் (புசுபுசுவென நுரைத்து லேயர் லேயரா எண்ணெய் தனியே பிரிந்து வரும்) போது உடனடியாக இறக்கி எண்ணெய் தடவி ரெடியா இருக்கும் தட்டில் கொட்டவும்,
- 8
பொதுவா ஸ்வீட் ஐ தட்டில் ஊற்றியதும் மேல்பகுதியை நெய் தடவிய ஸ்பூன் கொண்டு சமப்படுத்தி விடுவோம், ஆனா இதில் அதை செய்ய கூடாது, அப்படியே விட வேண்டும், ஓட்டை ஓட்டையா மேல் பகுதி இருப்பதில் தான் மேல் பகுதி மொறு மொறுப்பாகவும் நடுவில் மெதுமெதுப்பாகவும் இருக்கும், தட்டில் ஊற்றும் போது வரும் எண்ணெயும் சூட்டில் அடுப்பகுதி இழுத்து விடும்,
- 9
ஐந்து நிமிடம் கழித்து கத்தியால் துண்டுகள் போட்டு வைக்கவும் பின் 35_40 நிமிடங்கள் வரை ஆறவிடவும்
- 10
பின் அதை விட பெரிய ட்ரேயில் தலை கீழாக கவிழ்த்து ஓரங்கள் மற்றும் மேல் பகுதியை தட்டி விடவும்
- 11
துளி கூட ஒட்டாம ஊற்றிய போது இருந்த எண்ணெயை இழுத்து உடையாமல் உதிராமல் வரும்
- 12
பின் விரும்பிய வடிவில் துண்டுகள் போடவும்
- 13
மேல் பகுதி லைட் மஞ்சள் நிறம் நடுப்பகுதி லைட் சிவந்த நிறம் பார்க்கவே நன்றாக இருக்கும்
- 14
அட்டகாசமான அசத்தலான மைசூர் பாக் ரெடி தவறாமல் செய்து பாருங்கள்
Similar Recipes
-
மைசூர் பாக்
#book#அம்மாஎனது அம்மாவுக்கு எப்பொழுதும் மிகவும் பிடித்தது மைசூர் பாக்கு அதனால் அன்னையர் தினத்திற்கு என் அம்மாவிற்கு நான் இன்று மைசூர் பாக்கு செய்து கொடுத்தேன். நன்றாக இருந்தது. வாயில் போட்டால் கரையும் படி இருந்தது. sobi dhana -
பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak)
சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தில் செய்த மைசூர் பாக் மிகவும் சுவையாக இருந்தது. செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கும். ஒரு பப்பாளி பழத்தை நறுக்கினால் சில சமயம் சாப்பிட முடியாமல் போகலாம். அப்போது வீணாக்காமல் இது மாதிரி ஸ்வீட் செய்து சுவைக்கலாம்.#Cookwithmilk Renukabala -
-
நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)
#CF2 week2பார்த்த உடன் சுவைக்க நினைக்கும் நெய் மைசூர் பாக் Vaishu Aadhira -
-
மைசூர் போண்டா (Goli baji)
#karnataka#the.chennai.foodieஉடுப்பி ஸ்டைல் மைசூர் போண்டா. எல்லா இடங்களிலும் காணப்படும் டீ டைம் ஸ்னாக்ஸ் ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
மைசூர் பாக்
மைசூரு பாக்கா என்பது பேச்சு வழக்காகி மைசூர் பாக் என்றழைக்கப்படுகிறது.(பாக்கா என்பது இனிப்பு பாகு),தென்னிந்தியாவில் பிரபலமான இனிப்பு வகை.கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து தோன்றியது.இந்த இனிப்பு கடலை மாவு,சர்க்கரை,நெய் சேர்த்து செய்யப்படுகிறது.பண்டிகை காலங்களிலும்,விழாக்களிலும் பரிமாறி இதன் சுவையை உண்டு மகிழலாம். Aswani Vishnuprasad -
ஹார்லிக்ஸ் மைசூர் பாக் (Horlicks Mysore pak recipe in tamil)
#SAமைசூர் பாக் நிறைய விதத்தில் செய்துள்ளேன். சரஸ்வதி பூஜைக்கு வித்யாசமாக ஹார்லிக்ஸ் மைசூர் முயற்சித்தேன். மிகவும் அருமையான சுவையில் இருந்தது. Renukabala -
மூன்றே பொருட்கள் போதும் குறைந்த செலவில் வீட்டிலேயே செய்யலாம் சாக்லேட் சாஸ்
நான் மிகவும் இலகுவான முறையில் சாக்லேட் சாஸ் தயாரிக்கும் முறை பற்றியே குறிப்பிட்டுள்ளேன். இதை காற்று புகாத பாத்திரத்தில் நன்றாக மூடி, குளிரூட்டியில் 2 மாதங்கள் வரை கெடாமல் வைக்கலாம். மில்க் ஷேக், கேக், ஸ்மூதி, டோனட்ஸ், ஐஸ்கிரீம், டல்கானா காபி மற்றும் பலவற்றை தாயாரிக்க பயன்படுத்தலாம்.#goldenapron3#lockdown Fma Ash -
-
-
-
மைசூர் பாக்(mysore pak recipe in tamil)
ஸ்டப்ஸ்டப் ஆக கவனித்து செய்தோம் என்றால் அருமையாக வரும்.ஒரிஜினல் மைசூர்பாக். SugunaRavi Ravi -
முந்திரி மைசூர் பாக்(cashew mysore pak recipe in tamil)
#CF8 Mysorepak.வித்தியாசமான சுவையில் கடலைமைவுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து செய்த மைசூர்பாக்... Nalini Shankar -
-
மைசூர் பாக்
மைசூர் பாக்கு ஒரு தென்னிந்திய ரெசிபி.இது 15 நிமிடங்களில் செய்யப்படலாம்.இது OPOS நெறிமுறை#besan Athilakshmi Maharajan -
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)
வாழைப்பழம் வைத்து வித்தியாசமான முறையில் செய்த கேக்.#flour Sara's Cooking Diary -
💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil)
#m2021 என் மகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பு மற்றும் என் கணவரிடம் பாராட்டு பெற்ற ரெசிபி, வாயில் வைத்த உடன் கரையக்கூடிய 💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக். Vaishu Aadhira -
-
-
நெய் மைசூர் பாக்
#diwaliமைசூர் பாகம் ஒரு மெல்லும் - உங்கள் வாயில் இந்திய இனிப்பு. திருவிழாக்களில் குறிப்பாக தீபாவளி போது, நீங்கள் உண்மையில் ஒரு நிறுத்த முடியாது என மக்கள் இந்த சுவையாக உள்ள ஈடுபாடு. தயாரித்தல் முறையானது மிகவும் எளிமையானது மற்றும் 4 உட்கொள்களை மட்டுமே பயன்படுத்துகிறது, ஆனால் எந்தவொரு படிவமும் தாமதமாகவோ அல்லது தாழ்ந்ததாகவோ இருக்கும் போது அது இறுதி தயாரிப்பு அழிக்கப்படும். எனவே, அது சரியானதுதான் என்று நினைக்கிறீர்களா? இந்த செய்முறையை நீங்கள் முயற்சி செய்தால் உங்கள் சமையல்காரர்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!சந்தோஷமாக சமையல்! Supraja Nagarathinam -
ட்விஸ்ட் ஸ்வீட்
#leftoverமீதமான சாதத்தை கொண்டு சுவையாக ஒரு ஸ்வீட் ரெசிபி பார்க்க பாதுஷா போல் இருக்கும் ஆனால் சுவையில் எங்கேயோ இருக்கும் பழைய சாதத்தை பயன்படுத்தியது சிறிதளவும் ருசியில் தெரியாது Sudharani // OS KITCHEN -
செட்டிநாட்டு காளான் கிரேவி
#cookwithfriends#madhurasathishஇது செட்டிநாட்டு முறையில் செய்த காளான் மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
-
மிளகு ரசம் (pepper rasam)
#pepperஇந்த மிளகு ரசம் சளி, இருமல், காய்ச்சல் வரும்போது, சூப் மாதிரி பருகலாம். இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். காரமாகவும், சுவையாகவும் இருக்கும். Renukabala -
-
பாதாம் ஷீரா
இது குஜராத் மற்றும் பாம்பே மாநிலங்களில் கடவுளுக்கு படைக்கும் பாரம்பரியமான பிரசாதம் இதை என்னுடைய 200 ரெசிபி ஆக பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது Sudharani // OS KITCHEN -
-
More Recipes
கமெண்ட் (9)