சேமியா பால் பாயாசம்

#cookwithmilk
எனக்கு மிகவும் பிடித்த பால் பாயாசம்.
சமையல் குறிப்புகள்
- 1
அரை லிட்டர் ஆவின் பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும். அரை கப் சர்க்கரை எடுத்து வைத்துக் கொள்ளவும். 10 முந்திரிப்பருப்பை உடைத்து வைத்துக்கொள்ளவும். பத்து உலர் திராட்சை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கப் டரூ அல்லது சேவாரிட்சேமியா உடைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு நான் ஸ்டிக் கடாயில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து உருகிய உடன் முந்திரிப்பருப்பு மற்றும் திராட்சையை சிவக்க வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதே நெய்யில் சேமியாவை சிவக்க வறுத்துக்கொள்ளவும். வறுத்த சேமியாவை யும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
இப்போது முன்பே காய்ச்சு வைத்த பாலை கடாயில் சேர்த்து சூடு படுத்தவும்.பால் காய்ந்தவுடன் வறுத்த சேமியாவை அதில் சேர்த்து 10 நிமிடம் வரை வேக விடவும். நன்கு வெந்தவுடன், அரை கப் சர்க்கரை அதில் சேர்த்து கரையும் வரை நன்றாக கரண்டி கொண்டு கலந்து விடவும். பின்பு பொடியாக்கி வைத்த ஏலக்காய்த்தூளை சேர்க்கவும்.
- 4
பாயாசத்தை வேறு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும். இப்போது வறுத்து வைத்த திராட்சை மற்றும் முந்திரி பருப்பை அலங்கரிக்க கொஞ்சம் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு மீதியை பாயசத்தில் சேர்த்துக் கொள்ளவும். பரிமாறுவதற்கு தயாராக கிண்ணத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும். பாயசத்தை கப்பில் சேர்த்து மேலே வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை வைத்து அலங்கரித்து தரவும். சுவையான சேமியா பால் பாயாசம் தயார். விருந்திற்கு ஏற்ற பால் பாயாசம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான். Revathi -
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
பாஸ்டா பால் பாயாசம்
#np2எப்போதும் செய்யும் சேமியா ஜவ்வரிசி பால் பாயசத்தை விட இது போன்ற விதவிதமான பாஸ்தா பொருளைக் கொண்டு பாயாசம் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
-
-
சேமியா கேசரி
#grand2மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை.அதிலும் சேமியாவை வைத்து செய்வதால் அதிக சுவையுடன் சுலபமாகவும் செய்யக்கூடிய சேமியா கேசரி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
🥣🥣சேமியா கீர் 🥣🥣 (Semiya kheer recipe in tamil)
#Grand2 புத்தாண்டுக்காக என் மகள் செய்த ரெசிபி. Hema Sengottuvelu -
ஜவ்வரிசி பாயாசம்
#immunity #book.ஜவ்வரிசி, பால் , மற்றும் சர்க்கரை கொண்டு செய்த இனிப்பு பாயாசம். தமிழ் குக் பேடில் நான் இணைந்த 30வது நாள் மற்றும் இது என்னுடைய 50ஆவது ரெசிபி ஆகும். அதனால் இன்று ஏதாவது ஒரு இனிப்பு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஜவ்வரிசி வீட்டில் இருந்ததால் ஜவ்வரிசி பாயாசம் செய்தேன். இதில் முந்திரி, ஏலக்காய், பால், சாரை பருப்பு, மற்றும் குங்குமப்பூ சேர்த்திருப்பதால் சுவைக்க மட்டுமல்லாமல், உடல் நலத்திற்கும், உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
-
-
பாசிப்பருப்பு பாயாசம்
#poojaபாசிப்பருப்பு பாயாசம் வைக்க பருப்பு குறைவாக இருக்கிறதா கவலை வேண்டாம். பருப்பில் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பிறகு கொஞ்சம் அரிசி மாவை கரைத்து அதில் சேர்க்கவும். தேவை என்றால் தேங்காய் அரைத்து சேர்த்துக் கொள்ளவும். அதிக அளவு பாயாசம் கிடைக்கும்.அரிசி மாவு இல்லை என்றால் ஒரு ஸ்பூன் அரிசியை தண்ணீரில் ஊற வைத்து தேங்காயுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்து சேர்க்க பாயாசம் அதிகம் கிடைக்கும். Meena Ramesh -
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
-
பப்பாளி ரவா பாயாசம்(papaya rava payasam recipe in tamil)
#ed2 #ravaபப்பாளி பழத்தின் துண்டுகள் சேர்த்து ரவா பாயாசம் செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.முதலில் பால் பாயாசம் என்றாலே வெள்ளையாக இருக்கும் இது பப்பாளி பழத்தை சேர்த்து அரைத்து சேர்த்ததால் கலர் வித்தியாசமாக சுவை நன்றாக இருந்தது .புதுமையான பாயசம்.விருந்துகளில் சிறப்பு சேர்க்கும். Meena Ramesh -
-
-
-
-
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் எனக்கு மிகவும் பிடித்த ரெசிபிsandhiya
-
கமெண்ட் (4)