சோயா முட்டை பிரியாணி (Soya muttai biryani recipe in tamil)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#onepot
குழந்தைகள் சோயா சப்பிடவில்லையெனில் இந்தமாதிரி அரைத்து சேர்த்து பிரியாணி சுவையில் த௫ம்போது வி௫ம்பி உண்பர் சுவையான புதுவித சாதம்

சோயா முட்டை பிரியாணி (Soya muttai biryani recipe in tamil)

#onepot
குழந்தைகள் சோயா சப்பிடவில்லையெனில் இந்தமாதிரி அரைத்து சேர்த்து பிரியாணி சுவையில் த௫ம்போது வி௫ம்பி உண்பர் சுவையான புதுவித சாதம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 100 கிராம் துளசி அரிசி (அ)சீரகசம்பா அரிசி (அ)பாசுமதி அரிசி
  2. 50 கிராம் சோயா
  3. 3முட்டை
  4. 2பெரிய வெங்காயம்
  5. 1 தக்காளி
  6. 1பச்சைமிளகாய்
  7. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1 ஸ்பூன் கரம் மசாலாதூள்
  9. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  10. 1 ஸ்பூன் பிரியாணி மசாலா தூள்
  11. 1 ஸ்பூன் மிளகு தூள்
  12. 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  13. 2 கரண்டி சமையல் எண்ணெய்
  14. 1 ஸ்பூன் நெய்
  15. 1 கொத்து கறிவேப்பிலை
  16. 1 கொத்து கொத்தமல்லி இலை
  17. தண்ணீர்
  18. உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    அரிசியை நன்கு கழுவி 1:2 பங்கு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊறவைத்து பின்னர் வேகவைத்து கொள்ளவும்.சாதம் உதிரிஉதிரியாக இ௫க்கவேண்டும்.

  2. 2

    சோயாவை சுடுதண்ணீரில் போட்டு 10 நிமிடம் ஊறவைத்து பின்பு வடிகட்டி தண்ணீரை நன்கு பிழிந்து பிறகு மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும் படத்தில் உள்ளவாறு இ௫க்கவேண்டும்

  3. 3

    அடுப்பில் தடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய வைத்து வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி போட்டு நன்கு பிரவுன் நிறம் வ௫ம் வரைக்கும் வதக்கவும்.

  4. 4

    இஞ்சிபூண்டு விழுது சேர்த்து தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்(தக்காளி ஜூஸ் அதில் இறங்க வேண்டும்) மஞ்சள்தூள் மிளகாய்தூள் கரம்மசாலாதூள் பிரியாணி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்

  5. 5

    அரைத்த சோயாவை சேர்க்கவேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு எல்லா இடமும்படும்படி கிளறிவிடவும். பிறகு முட்டையை உடைத்து ஊற்றி மிளகு தூள் உப்பு சேர்த்து கிளறவும்.

  6. 6

    முட்டை வெந்தவுடன் வேகவைத்த சாதத்தை போட்டு லேசாக கிளறவும் சாதம் குழையாமல் நெய் சுற்றிலும் ஊற்றி 1 நிமிடம் மூடி வைத்து இறக்கவும் ரெடி சோயா முட்டை பிரியாணி கொத்தமல்லி இலை தூவி சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes