ராகி பால் கொழுக்கட்டை (Raagi paal kolukattai recipe in tamil)

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

ராகி பால் கொழுக்கட்டை (Raagi paal kolukattai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப் ராகி மாவு
  2. 1கப் வெல்லம்
  3. 1/2கப் தேங்காய்த்துருவல்
  4. 1/2கப் பால்
  5. 2ஸ்பூன் நெய்
  6. 4கப் தண்ணீர்
  7. அரை ஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு அகலமான கடாயில் 1கப் தண்ணீர், 1/2ஸ்பூன் நெய்,உப்பு போட்டு,ஒரு கொதி வந்தவுடன், அடுப்பை சிம்மில் வைத்து, ராகி மாவு சேர்த்து, கைவிடாமல் கலக்கவும்,... மாவு சேர்ந்து வந்தவுடன், ஒரு ஸ்பூன் நெய் விட்டு இறக்கவும்,...

  2. 2

    கை தொடும் அளவிற்கு சூடு வந்தவுடன்,மாவை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ளவும்,...பின்னர் சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்,....

  3. 3

    அகலமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்கவிட்டு,பின் உருண்டைகளைப் போட்டு, (கரண்டி வைத்து கிண்ட கூடாது கிண்டினால மாவு கரைந்துவிடும்)10 நிமிடம் வேக வைக்கவும்,.......... பின் கொழுக்கட்டை வெந்தவுடன்,வெல்லத்தை தண்ணி ஊற்றி கொதிக்க விட்டு,வடிகட்டி அதில் ஊற்றவும்,....

  4. 4

    பின் பால்,தேங்காய் துருவல்,ஏலக்காய் தூள், சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்,....(தண்ணீராக இருந்தாலும் இறக்கியவுடன் இஞ்சி விடும்)

  5. 5

    இனிப்பான சத்தான ராகி பால் கொழுக்கட்டை தயார்,....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shobana Ramnath
அன்று

Similar Recipes