எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பேருக்கு
  1. 1 டம்ளர் ராகி மாவு
  2. 1 டம்ளர் ரவை
  3. 1/2 டம்ளர் அரிசி மாவு
  4. தாளிக்க
  5. 1/2 ஸ்பூன் சீரகம்
  6. 1/4 ஸ்பூன் மிளகு
  7. 5 முந்திரிப் பருப்பு
  8. 1சிறிய துண்டு இஞ்சி
  9. 1பெரிய வெங்காயம்
  10. சிறிதளவுகருவேப்பிலை கொத்தமல்லி இலை
  11. தேவைக்கேற்ப உப்பு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு டம்ளர் ராகி மாவு, ஒரு டம்ளர் ரவை, அரை தம்ளர் அரிசி மாவு சேர்த்து கட்டி இல்லாமல் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். ஒரு மணி நேரம் மாவை ஊற வைக்கவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு, முந்திரி, கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதக்கிய வெங்காயத்தை மாவுடன் கலந்து கொள்ளவும்.

  3. 3

    ரவா தோசை பதத்திற்கு மாவு இருக்க வேண்டும். இப்பொழுது தோசைக்கல்லில் மாவை ஊற்றி மூடி வைத்து நன்கு வேகவைக்கவும். பிறகு திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.

  4. 4

    சத்தான ராகி ரவை தோசை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes