குல்கந்து தேங்காய் பர்ஃபி (Kulkanthu thenkaai burfi recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

குல்கந்து தேங்காய் பர்ஃபி (Kulkanthu thenkaai burfi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20-30 நிமிடங்கள்
10 பரிமாறுவது
  1. 1 கப் தேசிக்கேட்டர் கோக்கனெட்
  2. 1/2 கப் கண்டன்ஸ்டு மில்க்
  3. 1/2 டீஸ்பூன் குல்கந்து
  4. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  5. 2 டேபிள்ஸ்பூன் பால்
  6. 2 பொடித்த முந்திரி பருப்பு
  7. குல்கந்து ஸ்டப் செய்ய
  8. 3 டேபிள்ஸ்பூன் குல்கந்து
  9. 3 டேபிள்ஸ்பூன் நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சை
  10. அலங்கரிக்க
  11. 2 டேபிள்ஸ்பூன் தேசிக்கேட்டர் கோக்கனட்
  12. சிறிதுநறுக்கிய பிஸ்தா
  13. சிறிதுகாய்த்த ரோஜா இதழ்

சமையல் குறிப்புகள்

20-30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சை மற்றும் குல்கந்து சேர்த்து நன்றாக கலந்து உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்

  2. 2

    வாணலியில் நெய் விட்டு சூடாது குறைந்த தீயில் வைத்து அதில் குல்கந்து தேசிக்கேட்டர் கோக்கனட் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும் பிறகு கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து ஒன்றோடு ஒன்று கலக்கவும்

  3. 3

    பிறகு இதில் காய்ச்சிய பால் சேர்த்து ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்து வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றவும்

  4. 4

    பிறகு இதில் பொடித்த முந்திரி சேர்த்து நன்றாக கலந்து பெரிய உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டிக் கொள்ளவும்

  5. 5

    இப்போது குல்கந்து உருண்டைகளை வைத்து நன்றாக மூடி உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்

  6. 6

    உருட்டிய உருண்டைகளை தேசிக்கேட்டர் கோக்கனட் புரட்டி எடுத்துக்கொள்ளவும் இதனை 15 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும் பிறகு இதனை இரண்டாக வெட்டி படத்தில் காட்டியவாறு செய்த்துக்கொள்ளவும்

  7. 7

    தித்திப்பான குல்கந்து தேங்காய் பர்பி தயார் 😍😍 குறிப்பு கண்டன்ஸ்டு மில்க் அதற்கு பதிலாக சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம், அப்போது பால் சற்று சேர்த்து சேர்த்துக் கொள்ளவும்... தேசிக்கேட்டர் கோக்கனட் இதற்கு பதிலாக துருவிய தேங்காயை வெறும் வாணலியில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்

  8. 8

    உருண்டைகளாக உருட்டி வைக்கலாம்... பார்ப்பதற்கு இன்னும் அழகாக தோன்ற வேண்டுமென்பதற்காக நான் இதுபோல் செய்தேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

கமெண்ட் (19)

Similar Recipes