வெல்ல புட்டு

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#pooja.. நவராத்திரியின்போது பூஜைக்கு வெல்ல புட்டு செயவது வழக்கம்.. பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து செய்த எல்லோருக்கும் பிடித்த சுவைமிக்க புட்டு...

வெல்ல புட்டு

#pooja.. நவராத்திரியின்போது பூஜைக்கு வெல்ல புட்டு செயவது வழக்கம்.. பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து செய்த எல்லோருக்கும் பிடித்த சுவைமிக்க புட்டு...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2கப் பச்சரிசி மாவு
  2. 2கப் வெல்லம்
  3. 2ஸ்பூன் முந்திரி
  4. 2ஸ்பூன் பல்லு பல்லாக கீறின தேங்காய் துண்டுகள்
  5. 2ஸ்பூன் நெய்
  6. ஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    ஒரு கனமான வாணலியில் அரிசி மாவை சேர்த்து நன்றாக சிவக்க வறுத்துக்கவும். ஒரு பாத்திரத்தில் 2கப் தண்ணியுடன் 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு வைத்துக்கவும்

  2. 2

    வறுத்த மாவு ஆறினதும், கைப்பொறுக்கும் சூட்டில் மஞ்சள்தண்ணியை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து பிசைந்துக்கவும். (கையில் பிடித்தால் பிடிக்கணும், விட்டால் உதிரணம் பதத்துக்கு)

  3. 3

    பிசைந்த மாவை ஒருசுத்தமான வெள்ளை துணியில் சுத்தி இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் 15 நிமிடம் வேக வைத்து எடுத்து உதிர்த்து ஆற வைத்துக்கவும்

  4. 4

    ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து வெல்லம் சேர்த்து கொஞ்சமா தண்ணி சேர்த்து கரையவிட்டு வடிகட்டி, அதை திரும்பவும் ஸ்டவ்வில் வைத்து பாகு வைத்து உருட்டு பதம் வந்ததும் எடுத்துவிடவும்

  5. 5

    வெல்ல பாகை கொஞ்சம் கொஞ்சமாக வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் அரிசி மாவில் விட்டு நன்கு கலந்து கிளறி விடவும். பாக்கும்போது குழைந்தது இருக்கிற மாதிரி தோன்றும் ஆனால் போக போக உதிரி ஆயிடும்.

  6. 6

    ஒரு கரண்டியை ஸ்டவ்வில் வைத்து நெய் விட்டு தேங்காய், மற்றும் முந்திரியை சிவக்க வறுத்து புட்டில் சேர்த்து 2ஸ்பூன் நெய் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்

  7. 7

    சுவையான வெல்ல புட்டை அம்பாளுக்கு நைவேத்தியம் செய்து எல்லோருக்கும் குடுத்து சாப்பிடவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes