வெல்ல சீடை(seedai recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#KJ - ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி 🌷🌿..
கோகுலஷ்டமிக்கு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமானது உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், அவல்.. இதை பூஜைக்கு பிரசாதமாக நிவேதனம் செவ்வார்கள்.... நான் செய்த வெல்ல சீடை செய்முறை...

வெல்ல சீடை(seedai recipe in tamil)

#KJ - ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி 🌷🌿..
கோகுலஷ்டமிக்கு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமானது உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், அவல்.. இதை பூஜைக்கு பிரசாதமாக நிவேதனம் செவ்வார்கள்.... நான் செய்த வெல்ல சீடை செய்முறை...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25-30 நிமிடங்கள
25- எண்ணம்
  1. 3/4 கப் நன்கு வறுத்த அரிசிமாவு
  2. 1/2 கப் வெல்லம்
  3. 3/4 டேபிள்ஸ்பூன் உளுத்தம் மாவு
  4. 1டீஸ்பூன் நெய்
  5. 1 டீஸ்பூன் வெள்ள எள்ளு
  6. 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  7. 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

25-30 நிமிடங்கள
  1. 1

    வெல்ல சீடைக்கு பதப்படுத்தின பச்சரிசி மாவை நைசா பொடித்து வெறும் வாணலியில் நன்றாக வறுத்து எடுத்துக்கவும்.. அத்துடன் வறுத்து பொடித்து சலித்த உளுத்தம் மாவு, நெய் சேர்த்து நன்கு கலந்துவெச்சுக்கவும்

  2. 2

    ஸ்டவ்வில் வாணலி வைத்து வெல்லம் முழுகும் அளவு தண்ணீர் சேர்த்து கரைய விடடு அத்துடன் தேங்காய், மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க விடவும். பாகு பதம் தேவை இல்லை.(அழுக்கு இருந்தால் வடிகட்டி கொதிக்க விட்டு சேர்க்கவும்)

  3. 3

    அதை வறுத்து வைத்திருக்கும் அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு நன்கு கரண்டியால் கலந்து ஆற விட்டு பிறகு நன்றாக பிசைந்துக்கவும்

  4. 4

    அதை சின்ன சீடைகளாக உருட்டிவைதுக்கவும் ஸ்டவ்வில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சிம்மில் வைத்து 2,3 உருண்டைகள் போட்டு நீதானமாக பொறுமையாக திருப்பி விட்டு சிவந்ததும் வேக விட்டு எடுக்கவும்

  5. 5

    எல்லா வற்றையும் இதேபோல் வறுத்து எடுக்கவும். சூடாக இருக்கும்போது மொறு மொறுன்னு இருக்காது, கொஞ்சம். ஆறின பிறகு நன்கு கிறிஸ்ப்பாக இருக்கும். கண்ணனுக்கு பிடித்த சுவையான வெல்ல சீடை தயார்

  6. 6

    பூஜையில் வைத்து பிரசாதமக நிவேதானம் செய்து சுவைக்கவும்...எல்லோருக்கும் கிருஷ்ணா ஜெயந்தி வாழ்த்துக்கள்.... 🌷

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes