ஓட்ஸ் பாதாம் லட்டு (Oats Almond  Laddu recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

ஓட்ஸ்,பாதம் இரண்டையும் வறுத்து, பேரிச்சை வைத்து செய்த இந்த லட்டு மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்தது. செய்வது மிகவும் எளிது.
#GA4 #Week7 #Oats

ஓட்ஸ் பாதாம் லட்டு (Oats Almond  Laddu recipe in tamil)

ஓட்ஸ்,பாதம் இரண்டையும் வறுத்து, பேரிச்சை வைத்து செய்த இந்த லட்டு மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்தது. செய்வது மிகவும் எளிது.
#GA4 #Week7 #Oats

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
  1. 1கப் ஓட்ஸ்
  2. 1/2 கப் பாதம்
  3. 15 பேரிச்சை
  4. 2 டேபிள் ஸ்பூன் தேன்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஓட்ஸ்சை வெறும் வாணலியில் சேர்த்து இலேசாக ஒரு வாசம் வரும் வரை வறுத்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    பாதாமை அதேபோல் வெறும் வாணலியில் வறுத்து வைக்கவும்.

  3. 3

    வறுத்த ஓட்ஸ், பாதாமை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக்கொள்ளவும்.

  4. 4

    பேரிச்சையை கொட்டை நீக்கி, மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.

  5. 5

    பின்னர் ஓட்ஸ் பொடி, பாதம் பொடி, பேரிச்சை பேஸ்ட் எல்லாம் சேர்த்து கையால் நன்கு பிசையவும். மிகவும் கெட்டியாக இருக்கும்பட்சத்தில் தேன் சேர்த்து பிசையவும்.

  6. 6

    பின்னர் பிசைந்த கலவையில் விருப்பட்ட அளவில் உருண்டையாக உருட்டி லட்டு பிடிக்கவும். அதன் மேல் பாதம் துருவல் (விரும்பிய நட்ஸ்) வைத்து அலங்கரிக்கவும்.

  7. 7

    இப்போது மிகவும் சத்துக்கள் நிறைந்த, சுவையான பேரிச்சை சுவை கலந்த ஓட்ஸ் பாதம் லட்டு சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes