கொள்ளு ரசம்

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#GA4
#week12
#Rasam
கொள்ளு ரசம் மிகவும் மருத்துவ குணம் உடையது.குளிர்காலத்தில் ஆஸ்துமாவின் அவதியைத் தடுப்பதற்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்து வதற்கும், உடலை வலுவாக்குவதற்கும் ஏற்றது கொள்ளு ரசம்.
உடலில் ஏற்படும் வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் மூன்றில் கபத்தினை அழித்து உடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது கொள்ளு. கொள்ளுவுக்கு வெப்பத்தினை ஏற்படுத்தும் தன்மை உண்டு. இதனால், இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு என்று கொள்ளுவை சொல்லலாம்.
கொள்ளுவை ரசமாக வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துக் கொண்டு வந்தால், சுவையான உணவாகவும் ஆகிவிடும்; உடலுக்கு நலம் தரும் மருந்தாகவும் ஆகிவிடும். இந்த ரசம் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அவதிப்படும் ஆஸ்துமா மற்றும் கபம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20mins
2 பரிமாறுவது
  1. 1கப் கொள்ளு பருப்பு
  2. 2கப் கொள்ளு பருப்பு வெந்து தண்ணீர்
  3. 1சிறிய எலுமிச்சை அளவு புளி
  4. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. உப்பு
  6. ரசத்திற்கு அரைக்க:
  7. 1டீஸ்பூன் சீரகம்
  8. 1/2டீஸ்பூன் மிளகு
  9. 2வர மிளகாய்
  10. 2சிறிய வெங்காயம்
  11. 7பல் பூண்டு
  12. 1தக்காளி
  13. தாளிக்க:
  14. 1டீஸ்பூன் ஆயில்
  15. 1/2டீஸ்பூன் கடுகு
  16. 1/2டீஸ்பூன் சீரகம்
  17. 1//4டீஸ்பூன் பெருங்காயம்
  18. 1/2வர மிளகாய் கிள்ளியது
  19. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20mins
  1. 1

    1கப் கொள்ளு பருப்பை வெறும் கடாயில் 2 நிமிடம் நேரம் வறுத்து கழுவி குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு 3 விசில் வேகவிடவும்.வெந்தவுடன் கொள்ளு பருப்பை தனியாக எடுத்து வைக்கவும்‌. கொள்ளு பருப்பு வெந்த தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.

  2. 2

    கொள்ளு பருப்பு வெந்த தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும். ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊற விடவும்.ரசத்திற்கு அரைக்க: 1 டீஸ்பூன் சீரகம், 1/2டீஸ்பூன் மிளகு, 2 வரமிளகாய், 7 பல் பூண்டு, 2 சிறிய வெங்காயம் எடுத்து வைக்கவும்.

  3. 3

    சீரகம் மிளகு வரமிளகாய் பூண்டு வெங்காயம் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து 1 தக்காளியுடன் நைசாக அரைத்து, அரைத்த விழுதை கொள்ளு தண்ணீரில் சேர்த்து கலக்கி விடவும்.

  4. 4

    1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். அதனுடன் ஊற வைத்த புளியை கரைத்து 1/2 கப் அளவு புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.கடாயில் 1 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் சீரகம், 1/4 டீஸ்பூன் பெருங்காயம், 1/2 வரமிளகாய் கிள்ளியது, சிறிது கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்த்து விடவும்.

  5. 5

    சுவையான கொள்ளு பருப்பு ரசம் ரெடி.😄😄

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes