மலாய் கேக் (Malaai cake recipe in tamil)

Harika
Harika @cook_27246183

எப்பொழுதும் தீபாவளிக்கு ரசமலாய் அல்லது பால் ஸ்வீட் தான் செய்வீங்க வித்தியாசமாக இந்த மலாய் கேக் இந்த முறையை செய்து பாருங்கள் #skvdiwali

மலாய் கேக் (Malaai cake recipe in tamil)

எப்பொழுதும் தீபாவளிக்கு ரசமலாய் அல்லது பால் ஸ்வீட் தான் செய்வீங்க வித்தியாசமாக இந்த மலாய் கேக் இந்த முறையை செய்து பாருங்கள் #skvdiwali

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
10 பரிமாறுவது
  1. 2 கிளாஸ் (1 கிளாஸ் = 250 கிராம்)மைதா
  2. 1/2 கிளாஸ்தயிர்
  3. 1 கிளாஸ்பொடித்த சக்கரை
  4. 1/2 கிளாஸ்வெண்ணெய்
  5. 1 டேபிள் ஸ்பூன்பேக்கிங் சோடா
  6. மலாய் மில்க்
  7. 1/2 லிட்டர்பால்
  8. 2 டேபிள் ஸ்பூன்சர்க்கரை
  9. குங்குமப்பூ

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மலாய் மில்க் எப்படி செய்வது என்று பார்ப்போம். பால் காய்ச்சும் பாத்திரத்தில் அரை லிட்டர் பாலை ஊற்றிக் கொள்ளவும்.

  2. 2

    அரை லிட்டர் பால் 250ml வரும் வரை சுண்ட காய்ச்சவும்.

  3. 3

    பால் பாத்திரத்தின் ஓரத்தில் படியும் ஏடுகளை எடுத்து கொதிக்கும் பாலில் சேர்த்து விடவும்.

  4. 4

    குங்குமப்பூ, சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். மலாய் மில்க் இப்பொழுது செய்துவிட்டோம்.

  5. 5

    ஒரு பவுலில் மைதா, தயிர், சர்க்கரை, வெண்ணை, பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளவும்

  6. 6

    பால் சேர்த்து சேர்த்து 10 நிமிடம் நன்றாக கேக் பேட்டர் அடித்துக் கொள்ளவும்.

  7. 7

    ஒரு கேக் பானில் பட்டர் பேப்பரை போட்டுக்கொள்ளவும் அடித்து வைத்த கேக் பேட்டரை கேக் பானில் ஊற்றிக் கொள்ளவும்.

  8. 8

    30 நிமிடம் பேக் பண்ணி எடுத்துக் கொள்ளவும்.

  9. 9

    கேக் ஆறுவதற்குள் செய்துவைத்த மலாய் மில்க் கேக்கின் மேல் ஊற்றவும்.

  10. 10

    சாப்பிடும் பொழுது வெட்டிய கேகில் மீதி இருக்கும் மலாய் மில்க் ஊற்றி சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Harika
Harika @cook_27246183
அன்று

கமெண்ட்

Similar Recipes