மைதா மிட்டாய் (Maida Mithai recipe in Tamil)

Mishal Ladis
Mishal Ladis @cook_25648483

#GA4 week 9

மைதா மிட்டாய் (Maida Mithai recipe in Tamil)

#GA4 week 9

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பேர்
  1. 1 கப் மைதா
  2. 1/4 கப் நெய்
  3. 1 கப் சர்க்கரை
  4. 3 தேக்கரண்டி பால் பவுடர்
  5. 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பொடி
  6. 1 பின்ச் புட் கலர்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும் மைதா மாவு சேர்த்து சீரான சூட்டில் மாவின் நிறம் மாறாமல் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

  2. 2

    வதங்கிய மாவை தனியாக வைத்து விட்டு அதே கடாயில் சர்க்கரை + தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் பாகு வரும் வரை காய்ச்சவும், அதனுடன் வாசனைக்காக ஏலக்காய் பொடி அல்லது ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்

  3. 3

    பாகு ஆறி லேசான சூட்டில் இருக்கும் போது மைதா சேர்த்து கட்டிகள் இல்லாது நந்கு கிளறவும்

  4. 4

    மாவுடன் கூடிய வாணலியை ஸ்டவில் லேசான சூட்டில் வைத்து 2 நிமிடம் கிளரிய பின் பால் பவுடர் சேர்த்து கிளரவும்

  5. 5

    மிட்டாய் கலர்புல்லாக இருக்க ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு பின்ச் கலர் பொடி 5 சொட்டு தண்ணீருடன் மிட்டாய் மாவு கிளரவும்

  6. 6

    இப்போது 2 கலரில் மிட்டாய் மாவு தயார். இதை ஒரு தட்டில் எண்ணெய் தடவிய பின் 2 லேயர்களாக பரப்பி 20 முதல் 25 நிமிடங்கள் காத்திருக்கவும்

  7. 7

    மிட்டாய் நன்கு காய்ந்த பின் நம் விரும்பிய வடிவங்களில் வெட்டி எடுக்கவும். இப்போது சுவையான மைதா மிட்டய் தயார்

  8. 8

    அனைவருக்கும் இனிய தீபாவளி மற்றும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள் 🙏🙏🎉🎊

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mishal Ladis
Mishal Ladis @cook_25648483
அன்று

கமெண்ட் (2)

Similar Recipes