நெய் உருண்டை/ பயத்தம் லாடு (Nei urundai recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#Deepavali #kids2
இது பாரம்பரியமாக செய்யும் இனிப்பு வகையாகும். பாசிப்பயிறு செய்வதால் புரத சத்து அதிகம். மேலும் முந்திரி நெய் சேர்ப்பதால் சுவை அதிகம். ஹெல்தியான ஸ்பீட் வகையாகும்.

நெய் உருண்டை/ பயத்தம் லாடு (Nei urundai recipe in tamil)

#Deepavali #kids2
இது பாரம்பரியமாக செய்யும் இனிப்பு வகையாகும். பாசிப்பயிறு செய்வதால் புரத சத்து அதிகம். மேலும் முந்திரி நெய் சேர்ப்பதால் சுவை அதிகம். ஹெல்தியான ஸ்பீட் வகையாகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
10 எண்ணிக்கை
  1. 1கப் வறுத்த பயத்தம் பருப்பு மாவு
  2. 1கப் பொடித்த சர்க்கரை
  3. 10 முந்திரி பருப்பு
  4. 4 ஏலக்காய்
  5. 1கப் நெய் சுமாராக

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    நான் இங்கு அளவிற்கு ஒரு கப் சொல்லியுள்ளேன். நான் ஒரு கிலோ பயத்தம்பருப்பை நன்கு சிவக்க வறுத்து கொண்டேன். அதற்கு ஒரு கிலோ சர்க்கரை எடுத்துக் கொண்டேன். இரண்டையும் மாவு அரைக்கும் மிஷினில் கொடுத்து தனித்தனியாக நைசாக அரைத்துக் கொண்டேன். அதற்குத் தகுந்த முந்திரிப்பருப்பு நெய் மற்றும் ஏலக்காய் சேர்த்துக் கொண்டேன்.நான் இங்கு கொடுத்துள்ள அளவு ஒரு கப் பயத்தம் பருப்பு மாவு ஒரு கப் சர்க்கரை மற்றும் அதற்கு தேவையான பொருட்கள் கொடுத்துள்ளேன். ஒரு கப் அளவு அரைப்பது என்றால் மிக்ஸியில் அரைத்து சலித்துக் கொள்ளவும்.

  2. 2

    சிவக்க வறுத்து அரைத்த பாசிப்பருப்பு மாவு ஒரு முறை சலித்துக் கொள்ளவும். நீ அதை எடுத்து வைத்துக் கொள்ளவும். அதேபோல் அதே அளவிற்கு சர்க்கரை அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். முந்திரிப்பருப்பு மிக சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்துக் வைத்துக் கொள்ளவும். நெய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு வாணலியில் நெய் ஊற்றி நன்கு சூடு ஏறியவுடன் பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பை சிவக்க வறுத்துக்கொள்ளவும். ஒரு கப் அளவு பயத்தம்பருப்பு மாவிற்கு ஒரு கப் அளவு நன்கு நைசாக அரைத்த சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ளவும். அதனுடன் பொடித்த ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். நெய்யில் வறுத்த முந்திரித் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும். இப்போது வாணலியில் ஒரு கப் அளவிற்கு நெய் சேர்த்து நன்கு சூடு செய்து கொள்ளவும். கலந்த மாவில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கொள்ளவும்.

  4. 4

    கை சூடு பொறுக்கும் அளவிற்கு கலந்து கெட்டியாக உருண்டை பிடிக்கவும். நன்கு ஷேப் செய்து கொள்ளவும். நெய் ஆறினால் மீண்டும் சூடு படுத்தி மாவில் சேர்த்துக் கொள்ளவும். நெய் சூடுபடுத்தி மாவில் கலந்தால் தான் உருண்டை பிடிக்க வரும். அதனால் நெய் சூடு ஆரினால் மீண்டும் சூடு படுத்தி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து உருண்டை பிடித்துக் கொள்ளவும்.

  5. 5

    சுவையான ஆரோக்கியமான சத்தான பாரம்பரியமான நெய் உருண்டை அல்லது பயத்தம் லாடு தயார்.எல்லா வயதினருக்கும் இந்த உருண்டை மிகவும் பிடிக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes