பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)

#Deepavali # kids2
இது என் அம்மாவின் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். என்னம்மா கோதுமை அல்வா மிக அருமையாக செய்வார்கள்.அதேபோல் சீப்பு பணியாரம் பாசி பருப்பு முறுக்கு பயத்தம் உருண்டை பூண்டு முறுக்கு ஓட்டு பக்கோடா போன்றவை தீபாவளிக்கு மிக அருமையாக செய்வார்கள். நான் இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். இது என்னுடைய குக் பாடிர்க்கான முயற்சி.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி 2 மணி நேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் குண்டு உளுத்தம்பருப்பை லேசாக வாசம் வர வறுத்துக்கொள்ளவும். சிவக்க வறுக்க வேண்டாம். ஆறவைத்து மிக்ஸியில் நைசாக அரைத்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். 1தம்ளர் மாவு தேவைப்படும்.அதேபோல் ஒரு டம்ளர் அளவிற்கு பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். முழு பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
மிக்ஸியில் மிளகாய், பூண்டு பற்கள், உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். கிரைண்டரில் அரிசியை சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்கு மசிய அரைத்துக் கொள்ளவும். அழைக்கும்போது மிக்ஸியில் அரைத்த மிளகாய் விழுதை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். மாவு நன்கு மஹிந்தவுடன் வழித்து எடுத்துக்கொள்ளவும்.
- 3
அரிசி அரைத்த மாவில் உளுந்து மாவு, பொட்டுக்கடலை மாவு, சீரகம், எள்ளு, ஓமம், சேர்த்துக் கொள்ளவும். அரைக்கும்போது உப்பு சேர்த்திருப்பதால் உப்பு தேவை என்றால் தூள் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.தேவை என்றால் தண்ணீர் சிறிது சேர்த்து முறுக்கு பிழியும் பதத்திற்கு மாவை ரெடி செய்து கொள்ளவும்.இப்போது வெண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும். முறுக்கு புழியில் மாவை சேர்த்து ரெடி செய்து கொள்ளவும்.
- 4
ஒரு பெரிய வாணலியில் தேவையான எண்ணெய் சேர்த்து நன்கு சூடு செய்து கொள்ளவும். முறுக்கை பிழிந்து எண்ணெயில் சேர்க்கவும். இரண்டு புறமும் திருப்பிப் போட்டு சிவக்க விடவும். என்னை சத்தம் அடங்கியவுடன் முறுக்கை எண்ணெய் வடித்து எடுத்து விடவும்.
- 5
காரமான பூண்டு முறுக்கு தயார். இந்த முறுக்கு ரசம் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். பூண்டு வாசத்துடன் இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முறுக்கு (Murukku recipe in tamil)


முறுக்கு (Murukku recipe in tamil)


பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)


புழுங்கல் அரிசி கார முள்ளு முறுக்கு(mullu murukku recipe in tamil)


{பட்டர் முறுக்கு } Butter Murukku Recipe in tamil


முறுக்கு (Murukku Recipe in Tamil)


பொட்டுக்கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)


முறுக்கு (Murukku recipe in tamil)


முறுக்கு (Murukku Recipe in tamil)


தேங்காய்ப்பால் முறுக்கு (Thenkaaipaal murukku recipe in tamil)


செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)


முறுக்கு (murukku recipe in tamil)


பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)


செட்டிநாடு சீர் முறுக்கு / கை முறுக்கு (Chettinadu seer murukku Recipe in Tamil)


சீப்பு முறுக்கு


முறுக்கு(Murukku recipe in tamil)


பூண்டு ரிப்பன் முறுக்கு (Poondu ribbon murukku recipe in tamil)


பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)


உளுந்து முறுக்கு (Uluthu Murukku recipe in Tamil)


கார முறுக்கு (Kaara murukku recipe in tamil)


பொட்டுக்கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)


மொறு மொறு ரிங் முறுக்கு(ring murukku recipe in tamil)


அவல் முறுக்கு (Aval murukku recipe in tamil)


தேங்காய்ப்பால் முறுக்கு (Thenkaaipaal murukku recipe in tamil)


தட்டை முறுக்கு (Thattai murukku recipe in tamil)


உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)


ஓமப்பொடி. (Omapodi recipe in tamil)


சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda)


முறுக்கு (Murukku recipe in tamil)


முறுக்கு ஒரு புது விதம் (Murukku recipe in tamil)

கமெண்ட் (3)