புளி இடியாப்பம் (Puli idiappam recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

பாரம்பரிய இடியாப்பம்

புளி இடியாப்பம் (Puli idiappam recipe in tamil)

பாரம்பரிய இடியாப்பம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 கப்இடியாப்பம்
  2. புளி எலுமிச்சை அளவு
  3. கால் டீஸ்பூன்மஞ்சள் தூள்
  4. கடுகு சிறிதளவு
  5. அரை டீஸ்பூன்உளுந்து
  6. அரை டீஸ்பூன்கடலை பருப்பு
  7. பெருங்காயம் சிறிதளவு
  8. கறிவேப்பிலை சிறிதளவு
  9. வறுத்து அரைக்க 5 சிவப்பு மிளகாய் அரை டீஸ்பூன் வெந்தயம் அரை டீஸ்பூன் தனியா

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    ஒரு கப் இடியாப்பம் எடுத்து கொள்ளவும்

  2. 2

    மிளகாய் தனியா வெந்தயம் ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    ஒரு கடாயில் 5 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து உளுந்து கடலைப்பருப்பு பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்

  4. 4

    பின்னர் கரைத்து வைத்துள்ள புளி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்

  5. 5

    நன்றாக கொதிக்கும் போது சுருண்டு வரும் பதத்தில் வறுத்து வைத்துள்ள பொடியை அரைத்து சேர்க்கவும்

  6. 6

    பிறகு அதில் இடியாப்பம் சேர்த்து நன்கு கிளறவும்

  7. 7

    சுவையான புளி இடியாப்பம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes