ஹெர்பல் ரைஸ்

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#kids3
வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கசாயம் வைத்து குடி குடி என்று சொல்லி குடிக்க வைப்பதிற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் மேலும் எல்லாம் கொதிக்க விட்டு வடிகட்டி கொடுக்க வேண்டும் இந்த சாதத்தில் அது போல இல்லாமல் இருக்கும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள் இங்கே கொடுத்திருக்கும் பேஸ்ட்டை செய்து ஒரு வாரம் வரை ஸ்டோர் செய்து கொள்ளலாம்

ஹெர்பல் ரைஸ்

#kids3
வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கசாயம் வைத்து குடி குடி என்று சொல்லி குடிக்க வைப்பதிற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் மேலும் எல்லாம் கொதிக்க விட்டு வடிகட்டி கொடுக்க வேண்டும் இந்த சாதத்தில் அது போல இல்லாமல் இருக்கும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் முயற்சி செய்து பாருங்கள் இங்கே கொடுத்திருக்கும் பேஸ்ட்டை செய்து ஒரு வாரம் வரை ஸ்டோர் செய்து கொள்ளலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. ஹெர்பல் பேஸ்ட் செய்ய:
  2. 3 கொத்து முருங்கை கீரை
  3. 1 கைப்பிடி அளவு கறிவேப்பிலை
  4. 1கைப்பிடி அளவு புதினா இலை
  5. 2கைப்பிடி அளவு கற்பூரவள்ளி இலை
  6. 2 பெரிய வெத்தலை
  7. 1கைப்பிடி அளவு துளசி இலை
  8. 1/2கைப்பிடி அளவு தூதுவளை இலை
  9. 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  10. 2 டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  11. 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  12. 1 டேபிள் ஸ்பூன் மல்லி விதை
  13. 1 டேபிள் ஸ்பூன் குருமிளகு
  14. 6 வரமிளகாய்
  15. 3 டேபிள் ஸ்பூன் கொப்பரை தேங்காய் துருவல்
  16. 1 கட்டை பூண்டு
  17. 1 துண்டு இஞ்சி
  18. 1 லெமன் அளவு புளி
  19. 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  20. கல் உப்பு சிறிதளவு
  21. 50 மில்லி நல்லெண்ணெய்
  22. ஹெர்பல் ரைஸ் செய்ய:
  23. 1 கப் உதிராக வடித்த சாதம்
  24. 1 ஸ்பூன் கடுகு
  25. 1/2 ஸ்பூன் சீரகம்
  26. 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
  27. 1 ஸ்பூன் உடைத்த உளுத்தம்பருப்பு
  28. 2 டேபிள்ஸ்பூன் கரகரப்பாக உடைத்த வேர்க்கடலை,முந்திரி
  29. 2 வரமிளகாய்
  30. 1வெங்காயம்
  31. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  32. 4 டேபிள் ஸ்பூன் ஹெர்பல் பேஸ்ட்
  33. உப்பு சிறிதளவு
  34. 75 மில்லி நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    ஹெர்பல் பேஸ்ட் செய்ய: வெற்றிலை கற்பூரவள்ளி இலை மற்றும் முருங்கை இலை ஆகியவற்றை ப்ரஷாக எடுத்து வைக்கவும், முருங்கை கீரை ஐ சுத்தம் செய்து கொள்ளவும்

  2. 2

    தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்

  3. 3

    வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வதக்கவும்

  4. 4

    பின் சிவந்ததும் தனியே எடுத்து வைக்கவும் பின் உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து கிளற வேண்டும் அதிகம் வைத்தால் கலர் வந்து விடும் ஆனா வருபடாது இத எந்த அளவிற்கு வணக்கிறோமோ அந்த அளவுக்கு நன்றாக இருக்கும்

  5. 5

    இதேபோல் சீரகம் மிளகு கொத்தமல்லி விதை வரமிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து தனியே எடுக்கவும்

  6. 6

    அதேபோல் முருங்கை கீரை கறிவேப்பிலை புதினா கற்பூரவள்ளி இலை வெற்றிலை துளசி இலை ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும்

  7. 7

    பின் பூண்டு இஞ்சி சேர்த்து வதக்கவும் சற்று வதங்கியதும் தூதுவளை இலை மற்றும் புளி ஐ சேர்த்து வதக்கவும் (புளியை வறுப்பதால் வழுவழுப்பு குறைந்து சுட்ட புளி நன்றாக இருக்கும்)

  8. 8

    பின் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும் பின் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டிலே பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும் இவ்வாறு அனைத்தையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும்

  9. 9

    பின் ஆறவிடவும் மிக்ஸியில் சிறிது சிறிதாக போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்

  10. 10

    பின் தேங்காய் துருவல் கல் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்

  11. 11

    இந்த பேஸ்ட் ஐ பயன்படுத்தி தோசை சப்பாத்தி பூரி எதுவேண்டுமானாலும் செய்யலாம்

  12. 12

    ஹெர்பல் ரைஸ் செய்ய: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் வரமிளகாய் சேர்த்து வதக்கவும் பின் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும்

  13. 13

    பின் வேர்க்கடலை முந்திரி சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

  14. 14

    வெங்காயம் வதங்கியதும் அரைத்த ஹெர்பல் பேஸ்ட் ஐ சேர்த்து நன்கு வதக்கவும்

  15. 15

    பின் வடித்த சாதம் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

  16. 16

    மிகவும் ஆரோக்கியமான ஹெல்த்தியான ஹெர்பல் ரைஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes