நெல்லிக்காய் சாதம் (Gooseberry rice)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

நெல்லிக்காய் சாதம் (Gooseberry rice)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. 1 கப் சாதம்
  2. 3நெல்லிக்காய்
  3. 2 பச்சை மிளகாய்
  4. 1 டீஸ்பூன் கல் உப்பு
  5. தாளிக்க :
  6. 1 டேபிள் ஸ்பூன் நெய்
  7. 1/4 கடுகு
  8. 1+4 உளுந்துப்பருப்பு
  9. 1/4 கடலைப்பருப்பு
  10. 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
  11. 1 வெங்காயம்
  12. 1/4 மஞ்சள் தூள்
  13. கறிவேப்பிலை
  14. மல்லியிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரிசியை நன்கு கழுவி, பத்து நிமிடங்கள் ஊறவைத்து வடித்து உதிரியாக வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    நெல்லிக்காய், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    தண்ணீர் விடாமல் நெல்லிக்காயை கொரகொரப்பாக அரைத்து தயாராக வைத்துக்கொள்ளவும்.

  4. 4

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்துப் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும்.

  5. 5

    பின் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கி, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கலக்கவும்.

  6. 6

    இரண்டு நிமிடங்கள் கலந்து இறக்கினால் நெல்லிக்காய் சாதம் தயார்.

  7. 7

    இப்போது எடுத்து ஒரு பிளேட்டில் வைத்தால் சுவையான நெல்லிக்காய் சாதம் சுவைக்கத்தயார்.

  8. 8

    வைட்டமின் சத்து நிறைந்துள்ள இந்த நெல்லிக்காய் சாதத்தை குழந்தைகளின் லஞ்ச் பாஸ்க்கு, சிப்ஸ் வைத்து சுவைக்க கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes